THAMIL LANKA NEWS

dilluns, 4 de novembre del 2019

An interview with Mr.K.T.Rajasingham,

https://www.youtube.com/watch?v=kIJHPmQq2CQ&t=58s

“சூரன் போரை எப்போதும் என்னால் மறக்கமுடியாது”


“சூரன் போரை எப்போதும் என்னால் மறக்கமுடியாது”
‘அன்று நான் செத்து பிழைத்தவன்’ என்பது குறிப்பிடத்தக்கது. மாணவப் பிரயாத்தை அடுத்து வாலிபனாக தலைதூக்கிய காலம் அது.
எங்கள் ஊர் பருத்தித்துறையில் உள்ள புலோலி மேற்கு பகுதியில் அமைந்த, ஆத்தியடி என்ற சிறிய கிராமம் ஆகும்.
எங்கள் ஊருக்கு சொந்தமாக, ஆத்தியடிப் பிள்ளையார் என்ற ஓர் பிரசித்தமான ஆலயம் ஒன்று உண்டு. அந்த பிள்ளையாரின் அருளாலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பது ஐதீகம்.
அந்த காலத்தில் ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலில் நடைபெறும் ஐந்து கால பூஜைகள், அன்னதானம், மற்றும் ஏனைய வழிப்பாட்டு முறைகளை நாங்கள் பயப்பக்தியுடன் அனுஷ்டித்து கொண்டு வந்தோம்.
எப்போதுமே, கந்தசஷ்டி வழிப்பாட்டு நிகழ்வுகள், மிகவும் சிறப்பாக ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலில் நடைப்பெற்று வருவது வழக்கம்.
ஆரம்பக்காலத்தில், சொத்திகால் மாசிலாமணி அண்ணன் சூரனை ஆட்டி வந்தார். அவருக்கு பின்னர் வருடா வருடம் நான் தான் சூரனை ஆட்டி வந்தேன்.
எப்போதும், சூரன் போருக்கு முதல் நாள், சூரனைக் காவிக் கொண்டு, கோயிலில் வெளி வீதி சுற்றி வருவது வழக்கம். அன்றைய தினம் வெளி வீதி சுற்றி வந்போது குறிப்பிடப்படுப்படியான நிகழ்வுகள் எதும் நடக்கவில்லை.
இருப்பினும், கோயில் வடக்கு வீதியில் வெள்ளம் நின்றிருந்து. அதனால் அந்த வீதியின் பெரும் பகுதி சேறும் சகதியுமாக இருந்தது.
சேறும் சகதியுமான வடக்கு வீதியில் சூரனைக் காவிக்கு கொண்டு ஓடும் போது கால் சறுக்கும். அவ்வாறு சறுக்கும் போது விழவேண்டியும் வரும்.
மறுநாள் சூரன் போர் ஆரம்பமாற்டு..
மூலவரின் பூஜைகள் முடிந்து, வசந்த மண்டல பூஜைகள், தீப அழங்காரங்க பூஜைகளை அடுத்து, முருக பெருமானை சின்ன வாகனத்தில் வைத்து பக்தர்கள் தூக்கி உள் வீதி சுற்றி வந்தனர்.
அதையடுத்து பெரிய மயில் வாகனத்தில் வைத்து முருக பெருமனை பக்தர்கள் தூக்கி கொண்டு வந்து முன் முகப்பு மண்டபத்தில் வைப்பது வழக்கம்.
அதேநேரத்தில், சூரன் பேர் திருவிழாவிற்கு பொறுப்பான உபயகாரர் சூரன் காவுவதற்கு என்று பருத்தித்துறை கடற்கரை பகுதியில் இருந்து மீனவ நண்பர்களை அழைத்து வருவார்.
அவ்வாறு அழைத்து வரும் மீனவ நண்பர்களை, கோயில் மடத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான சிரம பரிகாரங்களை வழங்குவார்.
அதன் பின்னர் சுவாமி முன் மண்டபத்திற்கு வந்ததையடத்து, சூரன் காவுவர்கள் ஆயத்தம் ஆகுவார்கள்.
பின்னர் என்னை பார்த்து “தம்பி டேய் ஏறடா” என்று பணிப்பர்.
நானும் ஏறி, பிள்ளையாரை வணங்கிக் கொண்டு, சூரன் தலையில் உள்ள இரண்டு செவிகளையும் இறுக்கிப் பிடித்து கொண்டு தயாராகி கொள்வேன்.
அதையடுத்து, முன்வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி ஆகியவற்றில் முருகனுக்கும், சூரனுக்கும் உக்குரமமான போர் இடம்பெற ஆரம்பிக்கும்.
பக்தர்கள் ‘முருகா முருகா’ என்று கோஷம் எழுப்பி ‘வெற்றிவேல்’ ‘வீரவேல்‘ என்று முழங்குவார்கள்.
சூரனை வாகனத்தில் வைத்து காவுபவர்களின் உடலில் இருந்து வியர்வை ஆறாக செறியும்.
உபயகாரர், ‘உட்சாக பானங்களை’ ‘ஒரேஞ்சு’ போத்தல்களில் ஊற்றி கொடுத்து கொண்டே வருவர். இறுதியாக போராட்டம் வடக்கு வீதியில் நிலைக்கொள்ளும்.
கோயிலின் வடக்கு வீதி மிகவும் விசாலமான வீதி. அந்த வடக்கு வீதியில் தான், நாங்கள் கிரிக்கெட், காற்பந்து போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது வழக்கம்.
வடக்கு வீதியில் ‘பேய் ஆட்டம்’ ஆரம்பம்…….
சூரனை வாகனத்தில் வைத்து தோலில் காவும் கொம்பின் இரு பக்கத்திலும் இருவர் பிடித்து கொள்வர். அவர்கள் தான் ‘தலையாரிகள்’. அந்த தலையாரிகள் ‘ஓடு, ஆடு, கைமாறு‘ என்று கோஷம் எழுப்பி கொண்டே வருவர்.
அதை அடுத்து, சூரன் போரின் அட்காசம் நிமிசத்திற்கு நிமிசம் அதிகரித்து கொண்டே வரும்.
அன்று சூரனின் முன் கொம்பை பிடித்து கொண்டு வந்த தலையாரி, ‘கைமாறு‘ என்று கத்தினார்.
பின் கொம்பை பிடித்து கொண்டு வந்த தலையாரி ‘தூக்கிப்போடு, தூக்கிப்போடு ‘ என்று கத்தினார். இரு விதமான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
சூரனை காவிய ஒரு சிலர் ‘கைமாறுவதிலும்’ மறுசிலர் ‘ தூக்கி எறிவதிலும்’ ஈடுப்பட்டார்கள். அந்த ஆணை மாறாட்ட செயற்பாடு என்னையும், சூரனையும் வெகுவாக பாதித்தது.
நடப்பது நடக்கட்டும் என்று, நான் சூரன் செவியை பிடித்து ஆட்டிக்கொண்டே இருந்ததாக ஞாபகம்.
ஆனால் “கிரீச்” என்ற ஓசை, சூரன் சிலையின் வயிற்றுபக்கம் இரண்டாக வெடித்து கீழே விழுந்தது.
சிலை வெடிக்க நான், சூரன் தலையை கையில் பிடித்து, கீழே விழுந்து, உயிர் தப்பினேன். உண்மையில் முழங்கையில் சிறார்ப்புகளுடன் உயிர் தப்பினேன்.
பாதியாய் முறிந்து விழுந்த சூரனின் வயிற்று பாகம், காவிக் கொண்டு வந்த சிலர் மீது விழுந்தது.
அவர்களுக்கு, காயங்கள் ஏற்பட்டது. ஆனால் பின்னர் தான் தெரிந்தது அவை பாரதூரமாவைகள் அல்ல என்று.

மிகச் சிறிய அளவில் கருந்துளை கண்டுபிடிப்பு!!!