THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த நபர் கைது!

மாங்குளம் – தடியப்பன் பகுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் இன்று முல்லைதீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கும் – புலம்பெயர் நாடுகளில் வாழும் அரசியல் பிரமுகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்: வீ. ஆனந்தசங்கரி!

எமது மக்களின் விடிவிற்காக தமிழக தொப்புள்கொடி உறவுகளுடன் புலம்பெயர் தமிழர்களும் சேர்ந்து
குரல்கொடுத்து எமக்கு இன்றுவரை ஆதரவு அளித்துவரும் அனைத்து மக்களுக்கும்ரூபவ் அரசியல் தலைவர்கள் மற்றும்
பிரமுகர்களுக்கும் எமது கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்!
எமது கட்சி 1977 ஆம் ஆண்டு அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் பிரதான எதிர்க்கட்சியாக
இருந்த காலத்தில் தமிழகத்தின் உறவுகளும் மற்றும் அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
உலகறியச் செய்த செயற்பாட்டை எண்ணிப்பார்க்கின்றோம். அன்று தமிழகத்து அரசியல் தலைவர்களின்
தீவிரமான விடாமுயற்சியால்தான் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான எமது கட்சியின் செயலாளர் நாயகம் அமரர் அ. அமிர்தலிங்கம் உட்பட
பல தலைவர்கள் அடுத்தடுத்து விவேகமற்ற ஒரு சில இளைஞர்களின் செயற்பாட்டால் துப்பாக்கிக் குண்டுகளுக்கும்
தற்கொலைக் குண்டுக்கும் இரையாக்கப்பட்டபோதும் தொடர்ந்தும் இன்றுவரை சோர்ந்துவிடாது ஜனநாயக மரபுடன்
செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
எமக்கும் தமிழகத்து மக்களுக்கும் எவ்வாறு தொப்புள்கொடி உறவு உள்ளதோ அதேபோன்று சிங்கள மக்களுக்கும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் காலத்திலிருந்தே தமிழகத்திலும் தொப்புள்கொடி உறவு இருந்தது. இதுவரை பேசப்படாத விடயம் யாதெனில் சிங்கள இனத்தைதோற்றுவித்த விஜயனுக்கு மதுரை மன்னருடைய இளவரசி மணப்பெண்ணாகவும்ரூபவ் ஏனைய 700 நண்பர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப 700 கன்னியர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனவே தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் மாண்புமிகு கோத்தபாய ராஜபக்ஷவின் தெரிவை தமிழக அரசியல்
தலைவர்களில் ஒருசிலர் தமது வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்கிறார்கள். இது எமது மக்களின் நல்வாழ்வுக்கு
வழிவகுக்காமல் மேலும் மேலும் துன்பத்திற்கு வழிவகுத்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய ஜனாதிபதியை அணுகி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய
மாநிலங்களுக்குள்ள அதிகாரத்தை ஒத்த ஒரு அரசியலமைப்பை பெற்றுத்தர இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் முயற்சிக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் வேதனையின் விளிம்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் சார்பில் தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.
என்னால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை ஒரு கால கட்டத்தில் சிங்கள மக்கள் மற்றும் மதகுருமார்கள் அரசியல்
பிரமுகர்கள் மத்தியில் வலுவான ஆதரவு இருந்தது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.
உங்களில் ஒரு சிலரும் புலம்பெயர் நாட்டுப் பிரமுகர்கள் சிலரதும் அறிக்கைகள் இங்குள்ள எமது சகோதர
இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் வலுவடையச் செய்யுமே தவிரரூபவ் வேறு ஆக்கபூர்வமான எதையும்
செய்யப்போவதில்லை என்பதை நீங்கள் உணர்ந்து இனமுறுகலை ஏற்படுத்தாதவாறு இனங்களுக்கிடையே நல்லுறவை
வளர்ப்பதாக உங்கள் அறிக்கைகள் அமைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.
நீங்கள் அக்கறையெடுத்துச் செயற்படவிரும்புவீர்களேயானால் நாம் ஒரு புத்திஜீவிகள் அடங்கிய தூதுக்குழுவாக வந்து சந்தித்து உங்கள் ஆலோசனைகளைப் பெற்று எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வை அடைய ஆர்வமுடன் இருக்கின்றோம்!
நன்றி!.
வீ. ஆனந்தசங்கரி

புதிய பிரதமர் இவரா…? – பதவியை இராஜினாமா செய்த ரணில்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். சற்று முன்னர் இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளதுடன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றினையும் ஆற்றவுள்ளார்.
மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியதன் பின்னர் அந்த வெற்றிடத்திற்கு சிரேஷ்ட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை நியமிக்க பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(PARTHIPAN)

சற்றுமுன் கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது கண்டிக்கு சற்றுமுன் விஜயம் செய்துள்ளார்.
தறபோத அவர் கண்டிக்கு விஜயம் செய்து, ஸ்ரீதலதா மாளிகையில் வழிபடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

மீன் ஊறுகாய் சாப்பிடுவோம் வாருங்கள்!!….



தேவையான பொருட்கள் :
  • மீன் – 1/2 கிலோ 
  • மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி 
  • மிளகாய் தூள் – 3 அல்லது 4 மேஜைக்கரண்டி 
  • வெந்தய பொடி – 1 மேஜைக்கரண்டி
  • பூண்டு – 1
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு 
  • வினிகர் – 1/2 கப்
  • உப்பு – தேவையான அளவு 
  • கடுகு – 1 மேஜைக்கரண்டி 
  • கறிவேப்பில்லை – சிறிது 
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.   
பிறகு அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
5 நிமிடம் ஆனதும் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
சுவையான மீன் ஊறுகாய் ரெடி

வாழைப்பழ பிரட் செய்வது எப்படி என்று பார்ப்போம்!..

தேவையான பொருட்கள் :
  • வெண்ணெய் – 1/2 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • முட்டை – 2
  • வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
  • ஆல் பர்பஸ் ப்ளோர் – 1 1/2 கப்
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • தயிர் – 1/2 கப்
  • வாழைப்பழம் – 3
செய்முறை :

வெண்ணெய்யை ப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சர்க்கு கொண்டு வரவும். அல்லது லேசாக உருக்கி கொள்ளவும். முட்டை, தயிர் அனைத்தையும் ரூம் டெம்பரேச்சர்க்கு கொண்டு வரவும்.
வாழைப்பழத்தை நன்றாக மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆல் பர்பஸ் ப்ளோர், உப்பு, பேக்கிங் சோடா மூன்றையும் ஒரு பௌல்லில் கலந்து வைத்துக் கொள்ளவும். ஓவனை 350 F -ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
உருக்கிய வெண்ணெய் மற்றும் சர்க்கரையை ஒரு அகல பௌல்லில் சேர்த்து பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
பிறகு முட்டை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மறுபடி பீட்டர் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
பிறகு மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைத்துக் கொள்ளவும். 
கடைசியாக மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்.
பிரட் பேன்னில் வெண்ணெய்யை நன்றாக தடவி வைக்கவும். பிறகு கலவையை பேன்னில் ஊற்றி சமநிலைப்படுத்தவும்.
ஓவனில் வைத்து 55 – 60 நிமிடம் வரை பேக் செய்யவும். ஒரு குச்சியை நடுவில் குத்தி வெந்து விட்டதா என பார்க்கவும். நன்றாக ஆறியதும் கட் செய்து பரிமாறவும். சுவையான வாழைப்பழ பிரட் ரெடி.   
THAMILLANKA.COM                     

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று மாலை 4.30 அளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க் கட்சியில் பங்காற்றுவதா என்பது தொடர்ரபில் இதன்போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

வரலாற்றில் இன்று (20.11.2019)

நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
284 – டயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனான்.
1194 – இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.

1658 – இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் டச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.

1910 – பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.

1917 – உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1923 – ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)

1936 – ஸ்பானிய அரசியல்தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.

1947 – இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார்.

1962 – சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்தாதை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.

1977 – ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.

1979 – சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முஸ்லிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

1985 – மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.

1988 – ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

1992 – இங்கிலாந்தில் வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.993 – மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.

1994 – அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.

1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1999 – மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1750 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசன் (இ. 1799)

1901 – நாசிம் ஹிக்மட், துருக்கிய கவிஞர் (இ 1963)

1923 – நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (இ. 2014)

1942 – ஜோ பைடன், அமெரிக்க துணைத் தலைவர்

1980 – ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1910 – லியோ தல்ஸ்தோய், ரஷ்ய எழுத்தாளர் (பி. 1828)
சிறப்பு நாள்
யுனிசெஃப் – குழந்தைகள் நாள்

மெக்சிக்கோ – புரட்சி நாள் (1910)

வியட்நாம் – ஆசிரியர் நாள் 

இன்றைய ராசிபலன்(20.11.2019)

Horoscope,20.11.2019 : Divya

மேஷம்
இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியானநிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப் படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். 
ரிஷபம்
இன்று விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். 
மிதுனம்
இன்று கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவு படுத்திக்கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். 
கடகம்
இன்று கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும். எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். 
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். 
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுகவாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் பணவரத்து அதிகரிக்கும்.
துலாம்
இன்று எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். 
விருச்சிகம்
இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக் கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும் 
தனுசு
இன்று அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக் கும். பலவகை முன்னேற்றங் களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலா கும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
மகரம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்க ளில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம். திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும்.
மீனம்
இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். 

அரசாங்கத்தை கையளிக்க பிரதமர் ரணில் தயார்!…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதா என்பது குறித்து கலந்துரையாடப்படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கண்டிக்கு விஜயம்…..

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ச கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
குறித்த விஜயத்தை அவர் இன்று முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அவர் ஸ்ரீதலதா மாளிகையில் வழிபடுகளில் ஈடுபடவுள்ள நிலையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார்.
தொடர்ந்தும் மெனிக்ஹின்ன வூரிகடுவ பிரிவெனவுக்கும் சென்று ராமஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபானே பிரேமசிறி தேரரையும் சந்தித்து ஆசிப்பெறவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதி இன்று மாலை கெடம்பே ராபோஜசாச விகாரைக்கும் சென்று, விகாரையின் விகாராதிபதி கெப்படியாகொட பிரிவிமல தேரரரையும் சந்தித்து ஆசிபெறவுள்ளாதாகவும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா பயணம்…

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29ம் திகதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்டு, வரும் 29ம் திகதி, கோத்தாபய ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (19) நடைபெற்ற அந்த கட்சியின் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றம் தொடர்பில் பிரதமர் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
இந்தநிலையில் அமைச்சர்கள் தனித்தனியாக தமது அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகுவது ஏற்புடையது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை அறிக்கை!!!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

2019 ஜனாதிபதி தேர்தல் முடிவு நாட்டை நிரந்தரமாக பிரிக்குமா? இணைக்குமா?

நவீன துட்டகாமினி புதிய ஜனாதியாக பதவியேற்றார்.இவர் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய மண்டபத்தில் பௌத்த பிக்குகள் மத்தியில் தனது பதவிப்பிரமானத்தை ஏற்றுக்கொண்டார்.
2000 வருடங்களுக்கு முன்பு அனுராதபுர ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த எல்லாள மன்னனை எதிர்த்து துட்டகாமினி போரிட்டு வெற்றி பெற்றார்.
அதையடுத்து நாட்டில் இருந்து இந்தியர்களை விரட்டியடித்தார் அதே போல தமிழர்களின் கொட்டத்தை அடக்கிய கோட்டாபய ராஜபக்ஷ நவீன துட்டகாமினி என தன்னை அழைப்பதில் விருப்பம் கொண்டுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் தமிழீல விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிழ யுத்தம் 2009 மே மாதம் முடிவிற்கு வந்தது.அந்த கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு செயலாலராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார்.
தமிழில விடுதலைப் புலிகளுக்கிடையிலான இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வென்று தமிழர்களை அடிமை கொண்ட பெருமை கோட்டாபய ராஜபக்ஷவயே சாரும்.
அதையடுத்து நாட்டில் உள்ள பௌத்த பிக்குகளும்,பௌத்த மதத்தினரும் கோட்டாபய ராஜபக்ஷவயே நவீன துட்டகாமினி என வீரவணக்கம் செலுத்தி வந்தார்கள்.
2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவ மொட்டுக் கட்ச்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டார்.
அந்த கால கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்ச்சியின் கூட்டணி சார்பில் முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் மகன் சஜித் பிரேமதாச போட்டியிட்டார்.
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த வரும் தமிழர்களும்,முஸ்ஸீம்களும் கோட்டாபயவை எதிர்த்தனர்.அவர்கள் தங்கள் முழு ஆதரவையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க முன் வந்தனர்.
தமிழர்கள்,முஸ்ஸீம்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என நன்றாக தெரிந்த கோட்டாபய ராஜபக்ஷ இனம் ,மதம்,மொழி ஆகிய ஆயுதங்களை கையில் எடுத்தார்.
பௌத்தத்தை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்டு நாட்டில் வாழும் சிங்கள பௌத்தர்கள் சிறுபான்மை மக்களின் சர்வாதிகாரத்திற்கு கட்டுப்படக் கூடாது இதற்கு மாற்று வழிவகைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கினார்.
சிறுபான்மை மக்களின் சர்வாதிகாரத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விடுதலை பெற வேண்டும் நாட்டை தங்கள் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
நாட்டில் வாழும் 80 சதவிகித சிங்கள பௌத்த மக்கள் தங்களது வாக்கை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அளித்தனர்.
சென்ற 16ம் திகதி நடநடத தேர்தல் முடிவுகள் இந்த கருத்திற்கு ஒரு துள்ளியமாக எடுத்ததுக் காட்டாக பிரதிபலிக்கிறது.
வடக்கு,கிழக்கு மாகாணத்தை தவிர நாட்டில் உள்ள ஏனைய 7 மாகாணங்களிலும் கோட்டாபய ராஜபக்ஷவே முன்னிலை வகித்தார்.
மொத்தமாக 69 லட்சத்து 24 ஆயிரத்த 255 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 13லட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்து கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
நேற்று நவம்பர் 18ம் திகதி அனுராதபுரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தனக்கு சிங்கள பௌத்த மக்களின் அமொக ஆதரவு இருக்கிற விடயம் எனக்கு முன் கூட்டியே நன்றாக தெரியும் நானே வெற்றி பெறுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். என்ற போதிலும் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்ஸீம்களை என்னோடு இணைத்து செல்ல முயற்சித்தேன் ஆனால் அவர்கள் எனது அழைப்பிற்கு ஒத்துளைப்பு வழங்கவில்லை இருந்த போதிலும் இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்பு அவர்களையும் இலங்கையர்களாக கருதி என்னோடு அழைத்து செல்ல விரும்புகிறென் என கூறினார்.
முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எனத நீண்ட கால நண்பர்.1970ம் ஆண்டு அவர் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட தொடக்கம் 2015ம் ஆண்டுவரை எனது நண்பராக இருந்தார்.
அந்த கால கட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் தம்பிகளான பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவுடன் எனக்கு நெருங்கிய ஈடுபாடும் தொடர்புகளும் இருந்தன.
பசில் ராஜபக்ஷ அவர்களுடன் நான் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்.ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நான் அதிகம் தொடர்பு வைத்திருக்கவில்லை.
அன்றைய காலத்தில் நான் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உத்தியோக பூர்வ அலுவலகமான அலறி மாளிகையில் நான் அவ்வப்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட உரையாற்றுவது வழக்கம் .
அவ்வாறு உரையாற்றும் போது எல்லாம் கோட்டாபய ராஜபக்ஷவும் எனது பேச்சை கேட்பது எனது நினைவின் நிழலானது.
துரமிஸ்ட வசமாக 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இனங்களிற்கிடையிலும் மதங்களிற்கிடையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலாக தமிழ் விடுதலைப் புலிகளால் உரவாக்கத் தவறிய தமிழ்,முஸ்ஸீம் மற்றும் பௌத்த சிங்களம் என்ற தவிர்க்க முடியாத பிரிவுகளை இந்த தேர்தல் ஏற்படுத்திருக்கிறது. அந்த பிரிவு நிலை நாட்டின் ஒற்றுமைக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் கிடையாது.
நாட்டில் சமாதனமும் அமைதியும் நிலவுமா என காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கட்டுண்டோம் காத்திருப்போம் காலம் பதில் சொல்லும்.

பூஜித்த ஹேமஸ்ரீ மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ , மற்றும் கட்டாய காவலில் இருக்கும் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் எதிர்வரும் மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஜனாதிபதி வழங்கிய தற்போதய நியமனங்கள்!

DR.P.B.ஜெயசுந்தர – ஜனாதிபதியின் செயலாளர்
முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரத்ன – பாதுகாப்பு செயலாளர் 
S.R.அட்டிகல – நிதியமைச்சின் செயலாளர்/திரைசேரி செயலாளர்
ஓசத சேனாநாயக்க – தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் பணிப்பாளர்