THAMIL LANKA NEWS

dissabte, 23 de novembre del 2019

இன்றைய வானிலை அறிக்கை!….

நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று பிற்பகல் கல்கிசை தர்மபாலராம விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்
அத்துடன் அமரபுர நிக்கயாவின் வணக்கத்திற்குரிய கொட்டுகொட தம்மவாச மகாநாயக்க தேரரை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்।
நாட்டின் தற்போதய நிலையை கருத்தில் கொண்டு அதனை மீட்க தைரியமும் சக்தியும் கிடைக்கவேண்டுயுமென மகாநாயக்க தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விற்கு ஆசி வழங்கியுள்ளார்.

மாணவியைக் கடத்தியவர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசமந்தம்!

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை என கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தமிழ் லங்கா செய்தி பிரிவு கிளிநொச்சி போலீசாரிடம் தொடர்பு கொண்டு வினவியபொழுது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் , கிளிநொச்சியில் மாணவியைக் கடத்தியவர்களைக் கைது செய்வதில் பொலிஸார் பொறுப்பாக ஈடுபடவில்லை என கடத்தப்பட்ட மாணவியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவந்துள்ளதாவது கடந்த 18 ஆம் திகதி காலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை காரில் வந்த சில மர்ம நபர்களால் இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் இலக்கம், கடத்திய நபர் ஒருவரின் புகைப்படம், தொலைபேசி இலக்கம் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
எனினும் போதுமான ஆதாரங்கள், தடயங்கள் இருந்தும் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட எவரும் சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் கைது செய்யப்படவில்லை.
இது குறித்து பெற்றோர் பொலிஸாரிடம் கேள்விகேட்டபொழுது அவர்கள் அலட்சியமாக பதில் தருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய பொலிஸாருக்கு எதிராக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் யார் – இரா.சம்பந்தன்!!! #sambanthar#ranil_wickramasinghe

எதிர்கட்சி தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்க ரணில் விக்கிரமசிங்க இடமளிக்க வேண்டும் என தான் கூறியாத வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்மை தலமாக கொண்டு இயங்கும் ஊடாக நிருவான ஒன்றில் வழங்கிய செவிலே அவர் இதனை குறிப்பிட்டள்ளார்.
அத்துடன் எதிர்கட்சி தலைவர் பதவி குறித்து தாம் இதுவரை எந்த ஒரு கருத்தினையும் வெளியிடவில்லை என தெரிவித்த அவர் தேவை ஏற்படும் போது தாம் எதிர்கட்சி பதவி குறித்து கலந்துரையாட தயராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

கொலம்பியாவில் பயங்கர குண்டுவெடிப்பு!…. #colombia

கொலம்பியாவில் திடீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொலம்பியா தென்மேற்கு பகுதியில் சாண்டாண்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினதி கொலம்பியாவவின் தென்மேற்கு பகுதியில் சாண்டாண்டர் நகர பொலிஸ் நிலையத்தின் அருகமையில் வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு இவ்வாறு வெடித்துள்ளது.
கொலம்பியாவில் அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தக் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹாங்காங் அழிக்கப்பட்டிருக்கும் – டிரம்ப் #trump

ஹாங்காங்கில் போராட்டத்தை நசுக்க சீனா தனது படைகளை அனுப்பிய நிலையில், தாம் தலையிட்டிருக்கா விட்டால் 14 நிமிடங்களில் ஹாங்காங் முழுவதுமாக அழிக்கப்பட்டு இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிரம்ப், ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்காக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அதே நேரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும்ஆதரிப்பதாக தெரிவித்தார்.
அதிபர் ஷி ஜின்பிங் தமது மிகச்சிறந்த நண்பர் என்று கூறிய டிரம்ப், ஹாங்காங் பிரச்சினைக்கு சீனா தீர்வு காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பல லட்சம் சீன வீரர்கள் ஹாங்காங்கில் நுழைய தயாராக இருந்தபோது, அதனை தாம் தடுத்து நிறுத்தியதாக கூறிய டிரம்ப், இது மிகப்பெரிய தவறான நடவடிக்கை என்றும் அமெரிக்க-சீன வர்த்தக உறவுகளை பாதிக்கும் என்றும் சீனாவை எச்சரித்ததாக கூறினார்.

மகிந்த குடும்பத்தின் நகர்வுகள் மக்களை அச்சுறுத்துகின்றது

#tilvin_silva
mahindha rajapaksha family threat srilanka tamil muslim peoleசிங்கள பௌத்த வாக்குகளில் தாம் வெற்றிப்பெற்றவன் என அறிவித்து தமிழ் முஸ்லிம் மக்களை கோட்டாபய ராஜபக்ச அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ட்ரில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் ராஜபக்ச சகோதரர்கள் செயற்பட்டு வருகின்றனர் என தெரிவித்த அவர், இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களை கொண்ட தேசம் என்ற வகையில் அதனை புறக்கணித்து அவர் செயற்படுவாராயின் பாரிய சர்வதேச அழுத்தத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலால் ஒருவர் பலி!… #Dengue_killed_in_sri_lanka

#Dengue_killed_in_sri_lanka

டெங்குக் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 2010ஆம் ஆண்டிலேயே முதலாவது டெங்கு நோயாளி இனங்காணப்பட்டார்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இம் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 35 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு டெங்கு நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புகள் பெருகும் நிலையில் சூழல்களை வைத்திருக்க வேண்டாம் எனவும், பொது மக்களிடம் மாவட்ட சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரித்து செல்லாது தடுப்பதற்கு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா!

யாழ் பகுதி நயினாதீவு மீனவரின் வலையில் மிகப் பெரிய சுறா ஒன்று சிக்கியுள்ளது குறித்த சுமார் 2000 கிலோ நிறையுடையதாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்।
இவ்வாறு மிகப்பெரிய சுறா மீனவர்களின் வலையில் சிக்கியது என தகவலறிந்த மக்கள் மற்றும் இளைஞர்கள் புகைப்படங்கள் எடுத்துவருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டம்

srilanka ,11.23.2019:TM2
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசிவிற்கு வழங்குமாறு கோரி முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர் இராணுவத்தில் சேவையாற்றிய ஊனமுற்ற ஒருவரே இவ்வாறு உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன .

சபாநாயகர் பதவி யாருக்கு….. #maithripala_sirisena #thamillanka

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதிப்பிரதமர் பதவி போன்ற கெளரவமான பதவியொன்றை வழங்கவேண்டுமே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சபாநாயகர் பதவிக்கு சமல் ராஜபக்ஷ்வை நியமிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், அவர் நேற்றைய தினம் அமைச்சுப்பொறுப்பை பெற்றுக்கொண்டிருந்தார்.  
ஆகையால் தற்போது சபாநாயகர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவர்கள் என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கவேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்.