THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

இன்றைய ராசிபலன்(08.11.2019)

மேஷம் :

இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.  போட்டிகள் குறையும்,  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும்.
ரிஷபம் :

இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
மிதுனம் :

இன்று கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும் படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கலைத் துறையினர் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும்.
கடகம் :

இன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும்  மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
சிம்மம் :

இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும்.
கன்னி :

இன்று வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும்  எதிரிகள் விலகிச்செல்வார்கள்.சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
துலாம் :

இன்று குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும்.  நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.
விருச்சிகம் :

இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். வீண்செலவு குறையும்  வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு அதிகரிக்கும்.பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும்.
தனுசு :

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த  ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள்.
மகரம் :

இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்  எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
கும்பம் :

இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
மீனம் :

இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும்.

மனைவியால் கணவருக்கு நேர்ந்த விபரீதம்!!!

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கணவனை காரோடு எரித்து கொன்ற மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் அருகே பரத்தி எனும் பகுதியில் வீதியின் ஓரம் முழுவதும் எரிந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்த காரில் முற்றிலும் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று கிடந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காருடன் எரித்து கொல்லப்பட்டது நொய்யலை சேர்ந்த தொழிலதிபர் ரங்கசாமி என்பது தெரியவந்தது.
ரங்கசாமியின் மரணம் குறித்து விசாரித்த போது, ரங்கசாமிக்கு வேறு ஒரு பெண்ணிடன் தகாத உறவு இருந்து வந்ததும். இதனால் அவர் தன் மனைவியை துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரது மனைவி கவிதாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
கவிதா தனது மகன் அஸ்வின் குமாருடன் இணைந்து ரங்கசாமியை கழுத்தை நெறித்து கொன்று காருக்குள் போட்டுவிட்டு பரமத்தி அருகே காரை நிறுத்தி தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தாயையும் மகனையும் கைது செய்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு!!!

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30க்கு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்று சபை இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டள்ளது.
நிலையியல் கட்டளை 16இன் கீழ் பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அமர்வு இடம்பெறவுள்ளது. 
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற நிறைவேற்று குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம்எட்டப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு!!!

அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை பத்தரமுல்ல, பெலவத்த, அக்குரேகொட ,லங்கை, இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
கடற்படை மற்றும் வான்படை உள்ளிட்ட முப்படையின் தலைமையகங்களையும் ஒரே இடத்தில் பேணும் நோக்குடன், பெலவத்தை – அகுரேகொடயில் 77 ஏக்கர் காணியில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.53.3 மில்லியன் ரூபாய் இதற்காக முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் இதன் நிர்மாணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சு, முப்படைத் தலைமையகம் ஆகிய கட்டிடத்தொகுதிகளின் முதற்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இராணுவத் தலைமையகமும் அலுவலக கட்டிடத்தொகுதியும் இன்று ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படுகின்றது.

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு!!!

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்தன.இதற்காக ஐந்து தினங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக வீடுவீடாக செல்லும் போது, 11 பேருக்கு மேல் செல்ல முடியாது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
11க்கு மேற்பட்டவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது, சட்டவிரோத பேரணியாகவே கருதப்படும்.
அதேநேரம் அவர்கள் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்வதற்காக எடுத்துச் செல்கின்ற கையேடுகள் என்பன வீதிகளில் காட்சிப் படுத்தப்படுவதும் சட்டவிரோதமாகும்.
அத்துடன் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்காக, நாடு முழவதும் தற்காலிமாக 1661 பணியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!!!

வலஸ்முல்ல-வீரகெடிய பிரதேசத்தில் வசித்துவந்துள்ள நபர் ஒருவரிடம் இருந்து 1200 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய நகரில் கடற்படையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை காவல்துறையினார் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை முதலீட்டு சபையின் உடன்படிக்கை கைச்சாத்து!!!

இலங்கை முதலீட்டு சபை மற்றும் லாமோ ஹோட்டல் தனியார் (LA’ MORE Hotel (Private) Limited) நிறுவனம் இணைந்து தங்காலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
தங்காலை பிரதேசத்தில் 176 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைத்து அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 
இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் மங்கள யாப்பா மற்றும் Amagi Group தலைவர் எஸ் கணேசநாதன் ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இதற்காக 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், இதன்மூலம் 355 பேர் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர்- கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் இடையிலான சந்திப்பு!!!

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன வீர, வீராங்கனைகளுக்கு அநியாயம் நேர்ந்திருந்தால் அது தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விளையாட்டு பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகலவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சில வீர,வீராங்கனைகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர்.
இதுதொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. 
ஒப்பந்த உடன்படிக்கையில் உள்ளடக்காத கிரிக்கெட் வீரர்கள் குறித்து அமைச்சர் அங்கு கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார்.

காட்டு யானை தாக்கி பரிதாபமாக இருவர் உயிரிழப்பு!!!

காட்டு யானை தாக்கி பரிதாபமாக இருவர் உயிரிழப்பு!!!

அம்பாறை-மங்களகம-கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 59 வயதுடைய நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரவு 10 மணியளவில் குறித்த நபர் வீட்டில் இருந்த வேளை, யானையொன்று இவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கல்கிரயாகம ஆடியாகல பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் யானையொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி 62 வயதுடைய நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் ஆடியாகல-கஹல்ல பகுதியில் வசித்து வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் பலி!!!!

நேற்று இரவு 9.30 அளவில் பாதுக்க கலகெதர பிரேத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முகத்தை மூடிய தலைகவசத்துடன், உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

இன்றைய வானிலை அறிக்கை!!!

சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவான மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

காசியாபாத் ஹூப்ளி முதல் விமான சேவை ஆரம்பம்!!!

டெல்லியை அடுத்த காசியாபாத்தின் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு முதல் நேரடியான பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
50 பேர் பயணம் செய்ய கூடிய இந்த ஜெட் விமானம் ஹூப்ளியில் இருந்து புதன்,வியாழன், சனிக்கிழமை என வாரம் மூன்று முறை இயக்கப்படும். இதன் கட்டணம் ஒரு நபருக்கு 3 ஆயிரத்து 699 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் ஏர் என்ற தனியார் நிறுவனம் இதனை இயக்குகிறது. சிறுநகரங்களை வான்வழியாக இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ் இந்த விமான சேவை தொடங்கியுள்ளது.
https://www.youtube.com/watch?v=GmoiHNlFXJM
டெல்லி விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அதன் சுமையைக் குறைக்கும் வகையில் காசியாபாத்தில் இருந்து இந்த சிறிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.   
பயணிகள் விமானத்தின் சேவையை ஸ்டார் ஏர் நிறுவனம் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தி வருகிறது.

ஏமானில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்- 10 பேர் பலி

கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஏமான் அரசுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.இங்கு ஏமான் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுபடையினரும் சேர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்க்க ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் அரசும் ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மோஷா நகரில் உள்ள அரசு படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேர்தல் சட்ட விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 2983 முறைப்பாடுகள்

Srilanka,11.07.2019:TM2
தேர்தல் சட்ட விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் 2983 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது।
அதுமட்டுமல்லாமல், நேற்று மாலை 4।30 வரையான 24 மணித்தியாலங்களில் தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு நிலையங்களில்116 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது।
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!!


அம்பாந்தோட்டை லியன்கஸ்தோட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அருகில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டே குறிதத்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் ஒருவர் கைது!!!

மன்னார் இறுக்குளம்பிட்டி பிரதேசத்தில் சங்குகளுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கடற் படை அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடகடிக்கை ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியின் புதிய பகுதிகள் இன்று திறப்பு!..

தெற்கு அதிவேக வீதியின் புதிய பகுதிகள் 2 கட்டங்கள் இன்று திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மாத்தறை முதல் மாத்தளை வரையான பகுதியும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான சுமார் 40 கிலோ மீற்றர் கொண்ட பகுதியும் இன்று திறக்கப்படவுள்ளது.
அதேபோல் கடவத்தையில் இருந்து கெரவலபிட்டிய வரை அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையும் திறக்கப்பட உள்ளதாக நிஹால் சூரியராச்சி கூறியுள்ளார்.
இந்த வீதி திறக்கப்படவுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அதிவேக வீதி முறையாக அமைக்கப்படாமல் அரசியல் நோக்கம் கருதி திறக்கப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை வரவுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள்!!!

எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைவாக 5 நாடுகளைச் சேர்ந்த 14 கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கை வரவிருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!!!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அருகில் வைத்து சிறைச்சாலை காப்பாளர் ஒருவர் ஹெரோயின், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!!

இன்று முற்பகல் 10.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பான யோசனை சபை முதல்வரினால் முன்வைக்கப்படவுள்ளது. 
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையினால் நாடாளுமன்றத்தில் கூட்ட மதிப்பு எண்ணுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து சிக்கல் நிலைமை ஏற்படுவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
இந்தற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று தபால்மூலம் வாக்களிக்க இறுதி சந்தர்ப்பம்!!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே தபால்மூல வாக்களிக்க தவறிய சகல அரச ஊழியர்களும் இன்று வாக்களிக்க சந்தப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை தாபல்மூலம் வாக்களிக்க தவறிய சகல அரச ஊழியர்களும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு வாக்களிக்க இன்று காலை 7 மணி முதல் 4 மணி வரை சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த மாதம் 31 திகதியும், இந்த மாதம் 1 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றன.
ஆகவே, குறிப்பிட்ட அந்தந்த தினங்களில் வாக்களிக்க தவறிய தபால்மூல வாக்களர்களுக்கு இன்று இறுதி சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால்மூலம் வாக்களிக்க இம்முறை 6 இலட்சத்து 59 ஆயிரத்து 317 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

இன்றைய வானிலை அறிக்கை!!!

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று தற்காலிகமாக சிறிது குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது.
கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில்சில இடங்களில் காலை வேளையிலும் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று களுகங்கை நீர்த்தேக்கம் திறந்து வைப்பு

களுகங்கை நீர்த்தேக்கத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது।
களு கங்கை, லக்கல பல்லேக பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நீர்த்தேக்க நீரின் கொள்ளளவு 10 இலட்சத்து 248 கனமீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு-உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!..

எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை – சஜித் பிரேமதாச

திகனயில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களை வாழ்விப்பதற்காக 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கூறியுள்ளார். 
தாம் முன்வைத்துள்ள கொள்கை பிரகடனத்தை நன்றாக வாசித்துப் பார்க்குமாறும், அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அக்கூட்டத்தில் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். 
அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை பார்ப்பதற்கு வரமுடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாச நான் கடுமையாக சுகயீனமடைந்திருந்தமையினால், வரமுடியமை போய்விட்டதாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கினிகத்தேனையில் துப்பாக்கிச் சூடு – இருவர் கைது!!!!

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்த சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவளர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினிகத்தேன பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு 7.30 அளவில் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவளர்களால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.
குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்திய இரண்டு கை துப்பாக்கிகளுடன் கினிகத்தென பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்களில் இருந்த 3 வெற்று ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சந்தேக நபர்களை அடையாளம் காண ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதன்போது காயமடைந்த இருவரில் ஒருவர் கரவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்ற நபர் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு அரசியல் நோக்கம் கருதி நடத்தப்படவில்லை என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கினிகத்தேனை பொல்பிட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்திற்கு தடை ஏற்படுத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தொடர்பில் தாம் வருந்துவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் அறிக்கை ஆபத்து – மகிந்த ராஜபக்ச

ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம், எழுத்து மூல உறுதிப்பாட்டை, மகாநாயக்க தேரர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைவை விடவும்,  ஆபத்தானதாகவே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
நாட்டில் பிரதான கட்சியொன்று ஒற்றையாட்சியை நீக்கி விட்டு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டமை இதுவே முதல் தடவை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆதரவளிக்க தீர்மானம்!!!

எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கமைய சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அடைகலநாதன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.