THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

கொழும்பில் 2008-09 காலப்பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆட்களைக் கடத்தியது, சித்திரவதை செய்தது, கப்பம் பெற்றது, கொலை செய்ய சூழ்ச்சி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ், 667 குற்றச்சாட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் தலைமை நீதியரசரினால் நியமிக்கப்பட்டதும், விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மூத்த அரச சட்டவாளர் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் கோட்டாவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை

controversy-over-us-citizenship-of-presidential-candidate-gotabhayaஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என அவரின் சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச்செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆவணங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே தேர்தல்கள் ஆணையாளர் கோட்டாபய ராஜபக்சவிற்க வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான அனுமதியினை வழங்கினார் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்ளுக்கு முக்கிய செய்தி …..

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மாலை 5.00 மணி வரையில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுள்ளது.
குறித்த தகவலை தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரிய ரத்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் இருப்பார்களாயின் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தமது பிரதேச தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதன்போது, தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் பணி ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

25,712 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்

நாடுமுழுவதும் உள்ள 12 ஆயிரத்து 856 வாக்களிப்பு நிலையங்களுக்காக 25 ஆயிரத்து 712 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், 6 ஆயிரத்து 86 பொலிஸார் நாடுமுழுவதும் நடமாடும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், 6 ஆயிரத்து 86 சிவில் பாதுகாப்பு தரப்பினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன், வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களில் 2 ஆயிரத்து 193 பொலிஸார் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
கலகம் அடக்கும் பணிக்காக ஆயிரத்து 233 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வீதித் தடைகளுக்கான பணிகளை ஆயிரத்து 688 பொலிஸாரும், 190 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் மேற்கொள்ள உள்ளனர்.
இதேவேளை, குறித்த கடமைகள் உட்பட ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏனைய கடமைகளுக்காக 60 ஆயிரத்து 175 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், 8 ஆயிரத்து 80 சிவில் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளை மேற்கொள்ள உள்ளனர். சில கடமைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை அறிக்கை!!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும்களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் ரயில்சேவை தொடக்கம்!!!

இன்று முதல் காஷ்மீரில் 100 நாட்களுக்குப் பின் இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி ரத்து செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீரில் இன்று முதல் ரயில்போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.
ரயில்வே போலீசார் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்ரீநகர்- பாரமுல்லா மார்க்கத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.

பொலிவியா அதிபர் ஈவோ மொராலிஸ் ராஜினாமா!!!

பொலிவியாவில்,(Bolivia) நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து ஈவோ மொரேல்ஸ்(Evo Morales) விலகியுள்ளார். 
தேர்தல் முடிவு 25ம் திகதி வெளியாக இருந்த நிலையில், 24ம் திகதியே தாம் வெற்றிப்பெற்றதாக, அதிபர் ஈவோ மொரேல்ஸ் அறிவித்தார்.
இதனால், நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணுவத்தினரும், காவல்துறையினரும், அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு ஈவோ மொரேல்சை வலியுறுத்தினர். இதனைத் தொடரந்து பொலிவியா அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக, ஈவோ மொரேல்ஸ் அறிவித்தார்.

இன்று பிரதமர் மோடி பிரேசில் பயணம்….

பிரதமர் மோடி பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். இரண்டு நாள் மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.
பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதையொட்டி, இன்று பிற்பகல் பிரதமர் மோடி பிரேசிலியா நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பது இது 6வது முறையாகும். எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
தமது பயணத்தின்போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.
பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறையினர் கூட்டம், பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய அமர்வு, முழுமையான அமர்வு ஆகிய கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார்.
முக்கிய அமர்வில் தற்கால சூழலில் நாடுகளின் இறையாண்மையை காப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் 42 சதவீத மக்கள் தொகையைப் பெற்றுள்ள பிரிக்ஸ் நாடுகள், உலகளவிலான உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீத அளவுக்கு பங்களிப்பை வழங்கி வருகிறது.

விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்திய பன்றி!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விமான நிலயைத்தில் உடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பன்றி ஒன்று பயணிகளை உற்சாகமூட்டி வருகிறது.
பன்றிகள் விமானத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதேவேளையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில், பன்றி ஒன்று விமானப் பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது.
அதன் உரிமையாளர், விதவிதமான உடை அணிவித்து, விரல்களில் நகச் சாயம் பூசி, அலங்காரம் செய்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அதனுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதனால், விமானத்தில் செல்லும் பயணிகள் மன அழுத்தம் குறைந்து, உற்சாகமடைவதாகத் தெரிவிக்கிறார்கள்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா பயணம்!!!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 2 நாள் அரசு பயணமாக நாளை 13ம் திகதி இந்தியா வருகிறார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது பருவநிலை மாற்றம், நிலைத்த சந்தை, மற்றும் பொருளாதாரம் ஆகிய விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
14ம் திகதி இளவரசர் சார்லசுக்கு 71-வது பிறந்தநாள் ஆகும். அதை இந்தியாவிலேயே கொண்டாடுகிறார். சார்லஸ் இந்தியா வருவது 10-வது முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்தர்ப்பத்தில் சமூக மேம்பாட்டு திட்டங்களில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக இந்தியருக்கு காமன்வெல்த் விருதையும் வழங்க உள்ளார்.

THAMIL LANKA NEWS: வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம்: மஹிந்த த...

THAMIL LANKA NEWS: வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம்: மஹிந்த த...: தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தி ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கும் கடிதத்தை வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ...

ரயில் சேவையில் திடீர் மாற்றம்!!

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால் நவம்பர் 11 முதல் 15 வரை தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01,9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படவுள்ளதாகவும், அந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை இயங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15 மற்றும் 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் பகுதியில் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கம் சட்டமூலம் நிறைவேற்றம்

விளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கம் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிலையில், விளையாட்டுத்துறை தொடர்பிலான தவறுகளை தடுக்கும் திருத்த சட்டமூலம் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக விளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அது எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று………..


சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று இந்திய உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 அளவில் உயர்நீதிமன்றம் வழங்கப்படவுள்ளது.
வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, ஆலோசனைக்கு பின்னர் தீர்ப்பை அறிவிக்க உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எதிர்வரும் 17ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த தீர்ப்பு இன்று அவரினால் அறிவிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் உத்தர பிரதேச அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து சட்ட ஒழுங்கு குறித்து விசாரித்த பின்னர் தீர்ப்பை வழங்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் விஸ்தீரமான நிலத்திற்கு கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்புகள் உரிமை கோரி வருகின்றன.
இந்த நிலையில், அயோத்திக்காக சுமார் 28 ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கை முன்னதாக விசாரணைக்கு உட்படுத்திய அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தனது தீர்ப்பை வழங்கியது.
இதனடிப்படையில், வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிட்டது.
குறித்த தீர்ப்பை ஏற்கமறுத்து 14 பேர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த பிரச்சினையை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதற்கு உயர்நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது.
இதேவேளை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து தீர்ப்பாயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து, நாளாந்த வழக்கு விசாரணையாக கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முதல் அயோத்தி வழக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதியுடன் விசாரணை நிறைவுபெற்றபோதும், தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வகையில், குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அது எவருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்காது என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய எதிராக சுவரொட்டிகளை விநியோகித்த இருவருக்கு விளக்கமறியில்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அவதுரு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை விநியோகித்த இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நபர்கள் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயம் நியமனம்

மிலேனியம் (எம் .சீ.சீ) ஒப்பந்ததிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிக்க ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயம் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐவரடங்கிய நீதியரசர் குழாமிற்கு தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், உயர்நீதிமன்ற நீதியரசர்களான எல்.டீ.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, காமினி அமரசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேசேளை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் எதிர்வரும் 13 ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலாலியை வந்தடைந்த முதலாவது பயணிகள் விமானம்


பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு முதலாவது பயணிகள் விமானம் இன்று 12.30 இற்கு வந்தடைந்துள்ளது.
ஏஎல் 9102 என்ற இந்த விமானம் சென்னையிலிருந்து வருகை தந்ததோடு 12.45 இற்கு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விமான சேவையானது திங்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் செயற்படும் என்பதோடு, அதற்கான கட்டணமாக 7900 ரூபாய் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தின் நிர்மாண பணிகளுக்கு 2500 மில்லியன் செலவாகியதோடு 300 மில்லியன் ரூபாய் இந்திய அரசாங்கம் வழங்கிருந்தது.

இமானுவேல் பெர்னாணட்டோவிற்கும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு

மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாணட்டோவிற்கும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் இதன்போதி பல உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவு செய்யப்பட்டால் அதனை நிறைவேற்றுவதாகவும் மகிந்த ராஜபக்ச இதன்போது உறுதியளித்டதுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( by parthiban )

வாக்களிக்க செல்லும் முஸ்லிம் பெண்களுக்கான எச்சரிக்கை!

வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு முகத்தை மூடும் உடைகளை அணிந்து வர முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய புர்க்கா மற்றும் நிகாம் ஆகிய ஆடைகளை அணிவதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
by Parthiban

இந்த தூக்குத் தண்டனை கைதிக்கு மைத்திரி ஏன் பொது மன்னிப்பு வழங்கினார்?

வெளிநாட்டு பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஜுட் சமந்த ஜயமகவை பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கும் உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
பதவிக்காலம் நிறைவடைய 7 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் குறித்த உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு ராஜகிரிய றோயல் பார்க் தொடர்மாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த 18 வயதான இவோன் ஜோன்சன் என்ற பெண்ணை ஜூட் ஜயமக என்பவர் கொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குற்றவாளியான ஜூட் சமந்த ஜயமகவிற்கு 12ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்க்ப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜுட் சமந்த குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்தார்.
இதன்போது, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை போதுமானதாக இல்லை எனவும், அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
பின்னர் குற்றவாளியின் மீண்டும் மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை ஆட்சேபித்து, ஜுட் சமந்த ஜயமக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், இந்த மேன்முறையீட்டினை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்து தீர்ப்பினை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.
இந்த நிலையில், தூக்குத் தண்டனைக் கைதி ஜுட் சமந்த ஜயமகவை பொது மன்னிப்பில் விடுவிக்கும் உத்தரவை ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த பொது மன்னிப்பு ஆவணங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள கால அவசாகம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவசாகம் 13ம்திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அத்துடன், அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளரால் வழங்கப்படுகின்ற படத்துடன் கூடிய அத்தாட்சி பத்திரமும் வாக்களிக்க செல்லுபடியாகும்.
வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக தெளிவாக முகம் தெரியும் வகையில் தங்களது ஆடைகளை அணிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.