THAMIL LANKA NEWS

dimecres, 6 de novembre del 2019

துன்புறுத்தலுக்கு ஆளான ஊடக நபர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்பந்தம்

2005 முதல் 2015 வரை துன்புறுத்தல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான ஊடக நபர்களுக்கு நிவாரணம் வழங்க குழு பரிந்துரைகளை அமல்படுத்த அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
அமைச்சரவை அல்லாத அமைச்சரவை அல்லாத அமைச்சர் ருவான் விஜேவர்தனையின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் இந்த முன்மொழிவை முன்வைத்தார்
மேலும் , மேற்கண்ட காலப்பகுதியில் துன்புறுத்தலுக்கு ஆளான 78 பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது .

களு கங்கை நீர்த்தேக்கத் திட்டம் நாளைய தினம் திறந்துவைப்பு

களு கங்கை நீர்த்தேக்கத் திட்டம் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
களு கங்கை, லக்கல-பல்லேகம பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் வகையில் குறித்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளதோடு, நீரின் மொத்த கொள்ளளவு ஒரு மில்லியன் இருநூற்று நாற்பத்தி எட்டு கன மீட்டர் ஆகும்.

Laugfs எரிவாயு நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல்

Srilanka,11.06.2019:TM2
Laugfs எரிவாயு நிறுவனத்தின் பங்கு விலைகளை செயற்கையான முறையில் மாற்றிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
Laugfs எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய, U.K. திலக் என் டி சில்வா, தக்‌ஷில ஐ ஹுலங்கமுவ ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கொழும்பு – தர்மபால வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் கொலைச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 49 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு வருட காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒரு வருட காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை தேசிய டெங்கு ஒளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் மத்திய மாகாணத்திலே அதிகமானவர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 51 ஆயிரத்து 659 பேர் பதிவாகியுதன் இந்த வருடம் நேற்றைய தினம் வரை 64 ஆயிரத்து 299 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.