THAMIL LANKA NEWS

dimarts, 26 de novembre del 2019

இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு!….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவி ஏற்பு இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சராக ஜோன் செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சராக மகிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புகையிரத சேவைகள் அமைச்சராக சீ.பி.ரட்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அமைச்சராக சுசந்த புஞ்சிநிலமே நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளக வர்த்தக, நலனோம்பு அமைச்சராக அனுர பிரியதர்னச யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சராக சுசில் ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதேச வைத்தியம் அமைச்சராக பிரியங்கர ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்விச்சேவைகள் அமைச்சராக ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்சக்தி அமைச்சராக மகிந்தானந்த அளுத்கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் விவகார அமைச்சராக துமிந்த திதசாநயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்வலு அமைச்சராக ரோகித்த அபேகுணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சராக தயாசிநி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச முகாமைததுவ, கணக்கீடு அமைச்சராக லசந்த அழகிய வண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீட்டு மேம்பாடு அமைச்சராக கெகலிய ரம்புக்வெல நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா மேம்பாடு அமைச்சராக அருந்திக பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பம், புத்தாக்கம் அமைச்சராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள், சட்டசீர்திருத்தங்கள் அமைச்சராக மொகான் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர், சிறுவர் விவகாரம் அமைச்சராக விஜித பேருகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சராக ரொசான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்றுமதி, கமத்தொழில் அமைச்சராக ஜானக வக்கும்புர நியமிக்கப்பட்டுள்ளார்.
கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக விதுர விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராங்க ஷெஹான் சேமசிங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கனக்க ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சராக லொஹான் ரத்வத்தை நியமிக்கப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சராக விமலவீர திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றாடல் இராங்க அமைச்சராக ஜயந்த சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சராக சனத் நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக தாரக்க பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் புதிய அமைச்சரவைக் கூட்டம்!…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 11.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
சில திட்டங்கள் தொடர்பான யோசனைத் திட்டங்களை முன்வைக்கப்பட்டு இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலாற்ற தயார்!..

ஜனாதிபதி கோட்டாபய கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயலாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயராகவுள்ளது.
யாழில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை கூறினார்.
தமிழ் மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ள மக்கள் ஆணைக்கு அமைய தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து கடமையாற்ற தயார் எனம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் இன்று (27.11.2019)

நவம்பர் 27  கிரிகோரியன் ஆண்டின் 331 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 332 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது.

1830 – அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார்.

1895 – ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

1895 – பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.

1912 – மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.

1935 – இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது.

1940 – ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.

1971 – சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.

1975 – கின்னசு உலக நசாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரியக் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1983 – கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.

1999 – நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.

2001 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

2005 – பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.

2006 – கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்’ என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.

2007 – ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.

2007 – ஈழப்போர்: இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2009 – மாஸ்கோவிற்கும், சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமடைந்தனர்.
பிறப்புக்கள்
1934 – யோசப் பரராஜசிங்கம், இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், (இ. 2005)

1940 – புரூஸ் லீ, தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ. 1973)

1942 – ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க கிட்டார் கலைஞர் (இ. 1970)

1960 – யூலியா திமொஷென்கோ, உக்ரேனிய அரசியல்வாதி, பிரதமர்

1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1987)
1965 – பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதி (இ. 2008)

1980 – மைக்கேல் யார்டி, ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்

1986 – சுரேஷ் ரைனா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
கிமு 8 – ஓராசு, இத்தாலியக் கவிஞர் (பி. கிமு 65)

1852 – அடா லவ்லேஸ், ஆங்கிலேயக் கணிதவியலர் (பி. 1815)

1982 – லெப்டினன்ட் சங்கர், ஈழப்போராட்டத்தில் இறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி (பி. 1960)

2008 – வி. பி. சிங், முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1931)

2014 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1988)
சிறப்பு நாள்
தமிழ் ஈழம் – மாவீரர் நாள்

இன்றைய ராசி பலன்(27.11.2019)

மேஷம்
இன்று மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். 
ரிஷபம்
இன்று நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். 
மிதுனம்
இன்று உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
கடகம்
இன்று மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. புத்தி கூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். 
சிம்மம்
இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும் இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் ஏற்படலாம் கவனம் தேவை. செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் வீண் அலைச்சல் உடல் உழைப்பு ஆகியவை ஏற்படலாம்.
கன்னி
இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நீங்கள் அவசரமாக எதையும் செய்யக்கூடாது. சுனக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றியடைவதுடன் பணவரத்தும் கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். ஏழரை வாக்கு சனியால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம்.
துலாம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது.
தனுசு
இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.வீண் ஆசைகள் மனதில் தோன்றும். மனக்கஷ்டம் குறையும். ஆனால் செலவு அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகலாம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 
மகரம்
இன்று வேற்றுமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
கும்பம்
இன்று கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உத்தியோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். மன அமைதி உண்டாகும். அரசாங்க காரிய அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். 
மீனம்
இன்று நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகனம் யோகத்தை தரும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். அலைச்சல் அதிகரிக்கும்.

விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்!…

இன்று நாட்டின் 6 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, மாத்தளை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை!….

நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் இன்றிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 
நாட்டின் வடக்குமற்றும்கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலைநாளை காலையிலிருந்துமேலும் அதிகரிப்பு ஏற்படும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Guilty Dogs Compilation (2019) | Who Did That?

குப்பை சேகரிக்கும் நேரத்தில் இன்று முதல் மாற்றம்

இன்று முதல் கொழும்பு நகரின் குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இனிமேல் மாலை 6.30 இற்கு குப்பை சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
அடுத்தவருடத்திற்கான முதலாம் தவணை அடுத்தவருடம் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நள்ளிரவு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம்

இன்று நள்ளிரவு 12 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கடந்த ஆண்டு தலைவரின் மேற்கோள்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் வளாகத்தைச் சுற்றி காட்சிக்கு வைக்கப்பட்டு கொண்டாடபட்டது ஆனால் இந்த ஆண்டு அவை எதுவுமின்றி கொண்டாடபட்டது.

இன்றைய ராசிபலன் (26.11.2019)

மேஷம்
நட்புகளால் பாராட்டப்படுவீர்கள். ரகசியங்களை பாதுகாக்க முற்படுவீர்கள். கடந்தகாலங்களில் மனதை குழப்பிவந்த விஷயத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
ரிஷபம்
மற்றவர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்பதால் கவனமுடன் இருக்கவேண்டிய நாள். உங்களை சுற்றி தவறான வதந்திகள், பொய் பரப்புரைகள் உலவுவதால் மனம் அதிகம் சஞ்சலப்படும். நிதானம் காப்பது நல்லது.
மிதுனம்
மகிழ்ச்சியான நாள். புதன் கிரகம் சாதகமாக இருப்பதால் உற்சாகமாக செயல்களில் ஈடுபடுவீர்கள். செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.
கடகம்
வாரத்தின் முதல்நாளிலேயே உற்சாகத்தில் மிதக்க துவங்குவீர்கள். எத்தகைய முடிவுகள் ஆயினும் அதை திறம்பட எதிர்கொள்வீர்கள். சுயகட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் உள்ளிட்டவைகளே உங்களது வெற்றிக்கான காரணங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.
சிம்மம்
உள்ளிட்ட கிரகங்களின் சாதகமற்ற பார்வையினால், மனம் அடிக்கடி சஞ்சலப்படும். மாற்று மதத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. தியானம் மனதை ஒருமுகப்படுத்தும்
கன்னி
இலாபகரமான நாள். நிர்வாகத்தில் உயர்பதவியில் இருப்பவர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்தகால நிகழ்வுகளை அசைபோடுவீர்கள்.
துலாம்
சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் சாதகமான பார்வையினால், வெற்றிகளை குவிக்கப்போகிறீர்கள். நிதிச்சந்தையில் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதிலும் லாபம் அடைவீர்கள்.
விருச்சிகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேற கடின உழைப்பு அவசியம். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்லாதீர்கள். சவாலான சந்தர்ப்பங்களை தவிர்ப்பது நலம்.
தனுசு
நிதிவிவகாரங்களில் முன்னேற்றமான சூழல் நிலவும். சூரியன் – சந்திரன் கிரகங்களின் சாதகமான பார்வையால், கடந்தகால பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மகரம்
குடும்பம் மற்றும் பணியிடங்களில் சிலநேரங்களில்தான் மற்றவர்களின் உதவி கிடைக்கும். சிலநேரங்களில் எதிரியாக மாற வாய்ப்பு உள்ளதால், பேச்சில் நிதானம் தேவை. மனக்குழப்பங்களால் அவதிகள் ஏற்படும்.
கும்பம்
பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் துணிந்து முடிவெடுப்பீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால், பெரும்பாலான விஷயங்களில் வெற்றிக்கு வாய்ப்பு உண்டு. இலக்கை நோக்கி சீராக முன்னேறுவீர்கள்..
மீனம்
பெரியோர்களின் ஆசி தக்க சமயத்தில் உதவும். நண்பர்கள், உறவினர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவார்கள். பலவழிகளில் இருந்து உதவிகள் கிடைக்கும். அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!….

அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான நடைபெறவுள்ளது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சரவை கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கேட்ட போது நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு!!!

எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஷநாயக்க இன்று எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நாளைய தினம் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது.
இவர்களின் பெயர் பட்டியல் கிடைத்த பின்னர் அதற்கேற்ப ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் இது வரையில் எந்தவித தகவல்களும் கிடைக்க வில்லை என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.