THAMIL LANKA NEWS

diumenge, 24 de novembre del 2019

நிஷாந்த டி சில்வா சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றதன் காரணம் என்ன : காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள தகவல்

srilanka ,11.25.2019:TM2
பிரதான காவற்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா சுவிசர்லாந்துக்கு சென்றமை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

Padmaluxmi beautiful moments

போதை பொருளுடன் கைதானவர்கள் விளக்கமறியலில்

இரத்தினபுரியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட நால்வர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (24) இரத்தினபுரி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#sri_lanka_local_news #thamillankanews

மக்கள் விரும்பியதையே நான் செய்வேன் : கோட்டாபய

என்னுடைய மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் அந்த ஆணையின்படியே நான் நடப்பேன் என கோட்டாபய தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த மதகுருமார் மத்தியில் கருத்து தெரிவிக்கும்பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் , அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு நான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
#president_gotabaya_rajapaksa #srilanka_local_news #thamillankanews

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம்!

தமிழ் மக்களின் ஆரவதையும் மற்றும் அரசியல் ரீதியான தீர்வு என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக டெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கான முக்கிய வேண்டுகோள்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தேசம் முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் மாலை போட்டு வழிபட வருகிறார்கள்.
வருடம்தோறும் சபரிமலைக்கு செல்பவர்களில் ஆந்திரா, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம். பெரும்பானமையான பக்தர்கள் ரயில்களில் பயணம் செய்து சபரிமலை செல்கிறார்கள்.
அப்படி செல்பவர்கள் பூஜைகள் செய்வதற்காக ரயில்களில் கழிவறைக்குள்ளேயே குளிப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில்களுக்குள் குளிப்பது, பூஜை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டாம் என தென்னக ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதி பத்திரம் கிடைக்க பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான பாடம் மற்றும் பாட எண்ணில் மாற்றங்கள் இருப்பின் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த விடுத்துள்ளார்.
ஆகவே, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அதனை திருத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ராசிபலன் 25-11-2019

மேஷம்:
இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி நன்மை உண்டாகும்.
ரிஷபம்:
இன்று எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள்.
மிதுனம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.
கடகம்:
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மைதரும்.
சிம்மம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.
கன்னி:
இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
துலாம்:
இன்று எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். மன நிம்மதியை குலையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும்.
விருச்சிகம்:
இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய  ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.  குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
தனுசு:
இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்
மகரம்:
இன்று தொழில் வியாபாரம்  முன்னேற்றமடையும்.  போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை.  
கும்பம்:
இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தை குறைப்பது நல்லது.
மீனம்:
இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள் .

வளிமண்டலவியலின் முக்கிய அறிக்கை

வடகிழக்கு பருவமழை நிலைமைகள் படிப்படியாக நாடு முழுவதும் பரவி வருகின்றன, மேலும் 27 நவம்பர் 2019 முதல் நாடு முழுவதும் முழுமையாக நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது। எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் மழை நிலை தொடரும்.
வடக்கு, வட-மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்। பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பல்வேறு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பார, மொனராகலை , பதுல்லா மற்றும் பொலன்னருவ மாவட்டங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ.நீர்வீழ்ச்சி காணப்படும்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் எச்சரித்துள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட வழிபாட்டு!…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட பொங்கல் வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல கலந்து கொகண்டார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் ஹரிக்கடுவ பிரிவெனா விஹாரைக்குச் சென்று ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மஹா பீடத்தின் மஹாநாயக்கர் மற்றும் சங்கைக்குரிய நாபானே பேமசிறி தேரரைச் சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.
பிரதமர் மஹிந்த ராஜிபக்ஷ, கெட்டம்பேயில் ஸ்ரீ ராஜோபனாவாதாராமாதிபதி சங்கைக்குரிய கெப்பெட்டியாகொட ஸ்ரீ விமல தேரைச் சந்தித்தார்.
நாட்டை சிறப்பாக முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருப்பதாக தேரர் இதன் போது குறிப்பிட்டார்.

கவர்சியில் மயக்கும் பத்ம லட்சுமியின் ஹாட் புகைப்படங்கள்

மைத்திரிக்காக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்ன செய்கிறது!..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்றிற்குள் கொண்டு வருவதற்கே தன்னை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலக்கினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் பௌசி தெரிவித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஒன்றுகூடிய போது தன்னை கட்சியிலிருந்து விலக்குவதற்கு ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சட்டவிரோதமானது ஆகும்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு நாடாளுமன்ற செல்ல வேண்டுமாயின் அவர் என்னிடம் தெரிவித்திருக்கலாம்.
இவ்வாறு அரசியல் அநாகரிக வேலைகளில் ஈடுபடுவது தனது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக தாம் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் ஏ எச் எம் பௌசி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!…..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமது பதவிக்காலத்தில் அதிகாரபூர்வ வதிவிடமான, ஜனாதிபதி மாளிகையிலோ அல்லது வேறு அரசாங்க வதிவிடங்களிலோ குடியேறுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
நுகேகொட, மீரிஹானவில் உள்ள தமது சொந்த வீட்டிலேயே, தொடர்ந்தும் தங்கியிருக்கப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்க விவகாரங்களை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே, ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப் போவதாகவும், வேறு எந்த அரசாங்க வதிவிடங்களும் தனக்கு தேவையில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
தமது பாதுகாப்பு வாகன அணியின் எண்ணிக்கையைக் குறைக்குமாறும், பயணங்களின் போது வீதித்தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோர விபத்து – பாலத்திருந்து பறந்து விழுந்த கார்!! (காணொளி)

ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகிய காணொளி மிகவும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்துக்குள்ளாகிய கார் பறந்து வந்து விழுந்தபோது அதில் இருந்த ஏர் பேக் உடனடியாக செயல்பட்டதால் வாகன சாரதி உயிர் தப்பியுள்ளார்.
சாலையோரமாக தனது மகளுடன் காத்திருந்த பாதசாரி பெண் ஒருவர் கார் மோதி பரிதபமாக உயிரிழந்தார். 
வாகன சாரதி உட்பட 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான கார், மணிக்கு 104 கி.மீ வேகத்தில் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாலத்தில் அதிகபட்சம் 40 கி.மீ வேகத்தில் செல்லவேண்டும் என விதி இருக்கிறது.
விதியை மீறிச் சென்று விபத்துக்குள்ளாக்கி உயிர்ப்பலிக்கு காரணமாக இருந்த வாகன சாரதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கோட்டாபய – மோடி சந்திப்பில் நடக்க போவது என்ன!…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 29ம் திகதி இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, 13 வது திருத்தச் சட்டம் குறித்து குறித்து கலந்துரையாடப்படமாட்டாது என்று தகவல்கள் வெளியகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினை குறித்து, இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் பிற திட்டங்களைத் தொடருவது குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும், இது பெரும்பாலும் தமிழர்களுக்கு பயனளிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய அறிவித்தல்!….

கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
கொழும்பு நகரின் அபிவிருத்தி நடிவடிக்கை காரணமாக கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கட்டுநாயக்க, சீதுவ, ஜாஎல, வத்தளை, மாபொல, வெலிசர, கரவலப்பிட்டிய,றாகம,படுவத்த,ஆகிய பகுதிகளில் இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்லப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட கூட்டம்!..

இலங்கை தமிழ் தேசிய கட்சியின் விசேட குழுக்கூட்டம் இன்று நடைப்பெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்காக இந்த விசேட கூட்டம் திருகோணமலையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டிற்கு சென்ற தாய் – போராடும் மகள்!…

கலேவேலா நாரங்கஸ்வேவா பிரதேசத்தில் இருந்து 15 வருடங்களுக்கு முன்னர் 3 பிள்ளைகளுக்கு தாயான ஒருவர் வீட்டு வேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.
சென்று மூன்று மாதங்களுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே தொலைபேசி அழைப்பின் ஊடாக பேசியுள்ளார்.
ஆனால் இப்போது வரைக்கும் அந்த பெண்ணை பற்றிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
பெண்ணின் கணவர் தனது மனைவி தொடர்பாக பல அரச நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் எந்த ஒரு அரச நிறுவனங்களுக்கு அந்த குடுப்பத்தை பற்றி கண்டுக்கொள்வில்லை.
15 வருடங்களாக வெளிநாட்டிக்கு சென்ற எனது தாயை பற்றிய தகவல் இதுவரை கிடைக்கதால் அவரின் 28 வயதுடை மகள் தினுஷா ஹர்ஷானியும் தனது தாயைப் தேடி போராடிக்கொண்டுள்ளார்.
“அம்மா நலமாக இருப்பதாக, எங்களிடம் நான்கு மாத பணம் இருந்தாகவும் ஏஜென்சி கூறியிருந்தனர்.

எங்களுக்கு பணம் தேவையில்லை எங்கள் தாய் தான் வேண்டும் என மகள் தெரிவித்துள்ளார்.தாயை தேடி போடிக்கொண்டிருக்கும் மகள்….

வாசுதேவ நாணயக்கார வெளியிட்ட அறிக்கை!!!

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை பிரதமராக நியமிக்க பொது ஜன பெரமுன அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் வாசுதேவ நாணயக்காரவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சபாநாயகராக கடமையதற்றி வரும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய பதவி விலக உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து!…

இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் 50 அடி பள்ளத்தில் லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியது.
பலாங்கொட பகுதியில் இருந்து நோர்வுட் பகுதிக்கு மரக்கறி ஏற்றி சென்ற லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியது என்று பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெறிவித்தனர்.
பன்றி ஒன்று குருக்கே சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லொறியில் இருந்த பெருமளவிலான மரக்கறி வகைகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய வானிலை அறிக்கை!….

நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.