THAMIL LANKA NEWS

dimecres, 27 de novembre del 2019

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!….

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கு இனங்க 32 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் நாராஹேன்பிட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நாராஹேன்பிட்ட பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலும் திவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க கோரி கடிதம்!!

srilanka ,11.28.2019:TM2
பாராளுமன்ற உறுப்பிப்பினரான சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி, ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று மாலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 57 பேரின் கையொப்பத்துடன் கிடைத்த கடிதத்தின் பிரதியையும் அவருக்கு அனுப்பியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை!….

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது!…

அக்மீமன, முத்தலதனஹென பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம்!..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டு நாள் அரசமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயலாளர் P.B. ஜயசுந்தர, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் S.R. ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த பயணத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
நாளை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வரவேற்பு அளிக்கப்படும். அத்துடன் மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அஞ்சலி செலுத்துவார்.
இதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார்.
நாளை மாலை இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்துவார்.
#thamillankanews #tamil_news #sri_lanka_local_news #president_gotabaya #flying_to_india

BEATUFUL SRI LANKA

வரலாற்றில் இன்று (28.11.2019)

நவம்பர் 28  கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.

1729 – மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.

1821 – பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.

1843 – ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.

1893 – நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.

1905 – ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.

1912 – அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1918 – புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.

1942 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர் இறந்தார்கள்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.

1958 – சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.

1960 – மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.

1975 – கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1979 – நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.

1987 – தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.

1989 – பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

1990 – ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.

1990 – லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.

1991 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
பிறப்புக்கள்
1757 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவி, ஓவியர் (இ. 1827)

1820 – பிரெட்ரிக் எங்கெல்சு, ஜேர்மன் அரசியல் மெய்யியலாளர் (இ. 1895).

1864 – ஜேம்ஸ் ஆலன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1912)

1876 – பெர்ட் வோக்லர், தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் (இ. 1946)

1962 – யோன் சுருவாட், அமெரிக்க நடிகர்

1967 – ஆன்னா நிக்கோல் ஸ்மித், அமெரிக்க நடிகை (இ. 2007)

1984 – ஆன்டுரூ போகட், ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

1987 – கிரேய்க் கீஸ்வெட்டர், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1694 – மட்சுவோ பாஷோ, யப்பானியக் கவி (பி. 1644)

1890 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர் (பி. 1827)

1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கனடிய-அமெரிக்க கூடைப்பந்து வீரர் (பி. 1861)

1954 – என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)

1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1897)
சிறப்பு நாள்
அல்பேனியா – விடுதலை நாள் (1912)

மவுரித்தேனியா – விடுதலை நாள் (1960)

அரிசி விலை குறைக்க திட்டம் – சமல் ராஜபக்ஷ!…

அரசியின் விலையினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக் தெரிவித்துள்ளார்.
இதனை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு சிறு ஆலை உரிமையாளர்களுக்கு நெல் பங்குகளை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சமல் ராஜபக் கூறினார்.
சந்தையில் அரிசி பற்றாக்குறையை அரசாங்கம் அனுமதிக்காது என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனம்!…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களுக்கான பதவியை வழங்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுத் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கம்பஹா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக பியெல் நிஷாந்தவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் தலைவராக லக்ஷ்மன் வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக முத்து சிவலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சந்திம வீரக்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதனும், மன்னார் மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக காதர் மஸ்தானும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக எஸ்.வியாழேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு தலைவராக ஸ்ரீயாணி விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுர மாவட்ட இணைப்புக்குழு தலைவராக வீரகுமார திசாநாயக்கவும், பதுளை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக தேனுக விதானகமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சாரதி துஷ்மன்னவும், இரத்தினபுரி மாவட்ட இணைப்புக்குழு தலைவராக துனேஷ் கங்கந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய ராசி பலன்(28.11.2019)

மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம். 
மிதுனம்
இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். 
கடகம்
இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும்.வாய்ப்புகள் தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் மதிப்பு கூடும். 
கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். அரசியல்துறையினருக்கு எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
துலாம்
இன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். 
விருச்சிகம்
இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். 
தனுசு
இன்று குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளி டம் பாராட்டு கிடைக்கும். 
மகரம்
இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமைகாணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். 
மீனம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். கலைத்துறையினர் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

இம்ரான் கான் முடிவிற்கு உச்சநீதிமன்றம் தடை

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஜாவீத் பஜ்வாவிற்கு பணிக்காலம் முடிவடைந்த பின்பும் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவரிக் பதவிக்காலத்ததை நீடிக்க இம்ரான் கான் அரசு உத்தரவிட்டது.
ஆனால் இம் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. அமைச்சரவையின் பெரும்பான்மை அமைச்சர்களின் ஆதரவு கிடைக்காமை மற்றும் பாகிஸ்தான் அதிபரின் சம்மதம் இன்மை போன்ற காரணங்களால் ராணுவத் தளபதியின் பதவி நீட்டிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்குள் குழப்பங்கள் நிலவுவதாகவும் இது இம்ரான் கான் அரசை கவிழ்க்க முயற்ச்சியாகும் எனவும் சந்தேகிக்கபடுகிறது.

பல தடங்களை மீறி நடைபெற்று முடிந்த மாவீரன் நினைவேந்தல் நிகழ்வுகள் : படங்கள் இணைப்பு

மாவீரர் நாளை முன்னிட்டு இன்று வட மாகாணத்தின் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதுமட்டுமல்லாமல், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்திழும் பல இடங்களில் இன்று இடம்பெற்றது.
இதனிடையே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி மாணவர்கள் பல்கலைகழகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
ஆகையால் இன்றும் நாளையும் பல்கலைகழக வளாகத்திற்குள் பிரவேசிக்க கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிக் கடலில் நேஹா மாலிக்கின் ஹாட் புகைப்படங்கள்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!….



பத்தரமுல்லை பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 13 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பு 10 மற்றும் மஹரகம பகுதிகளில் வசிக்கின்ற 33 மற்றும் 43 வயதானவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தலங்கமை போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோட்டாபயவின் அதிரடி உத்தரவு

புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வரிகளைச் சீர்திருத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அறிவுறுத்தலை விடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ‘பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளின் கீழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு முந்தைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என்று குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பழிவாங்கும் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு ஆணைக்குழுவை நிறுவவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டா அரசாங்கத்தில் சிறுபாண்மையினருக்கு இடமில்லை!!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இதற்கமைய குறித்த பதவிப்பிரமானத்தில் ஒரு தமிழரோ முஸ்லிமோ பதவி வகிக்கவில்லையென தெரியவந்துள்ளது.

Elephant drawing itself

இரு மோட்டார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மட்டக்களப்பு கல்முனை பகுதியில் உள்ள கல்லடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு பொலிஸார் உட்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி, வேலூர் 4 ம் தெரு காளிகோவில் வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான 61 வயதுடைய சவுந்தரராஜன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒருவர் கைது!….

குருணாகல் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குளியாப்பிட்டிய, தண்டகமுவ பகுதியில் போலி போக்குவரத்து அனுமதி பத்திரங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.