THAMIL LANKA NEWS

diumenge, 10 de novembre del 2019

ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயம் நியமனம்

மிலேனியம் (எம் .சீ.சீ) ஒப்பந்ததிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிக்க ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயம் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐவரடங்கிய நீதியரசர் குழாமிற்கு தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், உயர்நீதிமன்ற நீதியரசர்களான எல்.டீ.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, காமினி அமரசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேசேளை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் எதிர்வரும் 13 ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சற்று முன்னர் போராட்டத்தி்ல் ஈடுபட்ட சிறைக்கைதிகள்!

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி சிறைக்கைதிகள் இருவர் போராட்டத்தி்ல ஈடுப்டபட்டுள்ளனர்.
இவர்கள் சற்று முன்னர் இவ்வாறு ரோட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
றோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவராயின் அதற்கு முன்னர் தங்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு பிரிவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களே தங்களையும் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். (by parthiban) )

கரையோர பகுதிகளில் புல்புல் சூறாவளியின் தாக்கம்

பங்களாதேஸ் மற்றும் இந்திய கரையோர பகுதிகளில் புல்புல் சூறாவளி தாக்கியுள்ளது.

இதில் குறைந்த பட்சம் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் மாத்திரம் 7 பேர் பலியாகினர். 20 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் இந்த சூறாவளி தாக்கி இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
சூறாவளிக்கு முன்னதாகவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால், பெரும் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சூறாவளி வலுவிழந்துள்ளதானகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரி தலைமைதாங்கும் இறுதி அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கும் இறுதி அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடந்த கால வேலை திட்டங்கள் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றையும் ஜனாதிபதி இதன்போது சமர்ப்பிக்கவுள்ளதோடு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து விசேட உரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்.
இதேவேளை, இந்த வாரத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றினையும் ஆற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
by Parthiban

விடுதலைப் புலிகளின் தங்கத்திலேயே மஹிந்த அணியினர் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள்: அமைச்சர் ராஜித !

மஹிந்த அணியினர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைத்தே தற்போது தேர்தல் பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக அமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
மேலும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாவும் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும். வழக்கு விசாரணைகள் அனைத்தும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் தாம் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பதாலேயே அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்புடன் ராஜபக்‌ஷக்கள் செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகைத் தங்கத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைத்தே தற்போது தேர்தல் பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
புலிகளிடமிருந்த பெருந்தொகை தங்கத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கி வைத்துள்ளனர். இலங்கையில் அவை வைக்கப்பட்டுள்ள சில இடங்கள் குறித்தும் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் கூறினார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகன தரிப்பிடத்தில் திடீர் தீ பரவரல்

கொழும்பு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் 47 உந்துருளிகளில் திடீர் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 47 மோட்டார் சைக்கிள்களும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று…….

பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக ,விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 11.30 முதல், பிற்பகல் 2.30 வரை இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகள் குறித்த சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் இன்று 11.11.2019!

நவம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நேபில்ஸ் பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
1673 – உக்ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-லித்துவேனியாப் படைகள் ஓட்டோமான் இராணுவத்தைத் தோற்கடித்தன.
1675 – குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவானார்.
1675 – லெய்ப்னிட்ஸ் (Gottfried Leibniz) என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பாவித்தார்.
1778 – மத்திய நியூ யோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
1831 – அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டான்.
1865 – டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்குக் கொடுத்தது.
1880 – ஆஸ்திரேலியாவின் Bushranger நெட் கெல்லி மெல்பேர்னில் தூக்கிலிடப்பட்டான்.
1887 – ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1889 – வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
1909 – ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
1918 – பிரான்சில் “கொம்பியேன் காடு” என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
1918 – ஜோசப் பித்சூத்ஸ்கி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
1919 – இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1930 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1933 – யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
1940 – ஐக்கிய அமெரிக்காவின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத சூறாவளியினால் 144 பேர் இறந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி பிரான்ஸ் மீதான தனது முற்றுகையை முடித்தது.
1960 – தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1965 – ரொடீசியாவில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
1966 – நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
1968 – மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
1975 – ஆஸ்திரேலியப் பிரதமர் கஃப் விட்லம் தலைமையிலான அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.
1992 – இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
2004 – யாசர் அரபாத் இறந்து விட்டதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.
பிறப்புக்கள்
1898 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)
1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
1937 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்
1945 – டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர்
1974 – லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
1993 – கப்டன் மயூரன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1970)
1993 – கப்டன் ஈழமாறன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1973)
2004 – யாசர் அரபாத், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர், நோபல் பரிசாளர் (பி. 1929)
2005 – பீட்டர் டிரக்கர், ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (பி. 1909)
சிறப்பு நாள்
பொதுநலவாய நாடுகள் – நினைவுறுத்தும் நாள்
போலந்து – விடுதலை நாள் (1918)
அங்கோலா – விடுதலை நாள் (1975)

இன்றைய ராசி பலன் 11.11.2019

மேஷம்
மனதில் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், போதுமான பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வரவை விட செலவுகளே அதிகரிக்கும்.
ரிஷபம்
அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.
மிதுனம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்கக் காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கடகம்
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு உறவினர்களால் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
சிம்மம்
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாயின் ஆலோசனைப்படி செயல்படுவது நன்மை தரும். இன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பணிகளை பிறரிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக் கூடும்.
கன்னி
உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேற்றுமை விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.
துலாம்
மனதில் தைரியம் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சி எடுப்பதற்கு உகந்த நாள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும். அரசாங்க அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் உங்களை விமர்சித்த சக ஊழியர்கள் மன்னிப்பு கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
விருச்சிகம்
இன்று எதிலும் பொறுமை அவசியம். சகோதரர்கள் வகையில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தள்ளிப் போகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு
இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.வெளியூரிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
மகரம்
உற்சாகமான நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து விசேஷங் களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
கும்பம்
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தேவையான பணம் கையில் இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படும்.
மீனம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் சில செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.