THAMIL LANKA NEWS

dissabte, 30 de novembre del 2019

மரை இறைச்சியுடன் இருவர் கைது!….

சீரற்ற காலநிலையால் மின்சார தடை!….

காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு!…

நான் யார் என்பதை 5 வருடங்களில் நீங்களே தீர்மானிப்பீர்கள்….!

G.C.E. O/L மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!…

இன்று HIV யை அடையாளம் காணும் எய்ட்ஸ் ஒழிப்பு தினம்!…

கோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் தற்போது சிந்தியுங்கள்!…

மீட்பு பணிகள் ஆரம்பம்!….

சிவப்பு எச்சரிக்கை!…

இன்றைய வானிலை அறிக்கை!….

நாடு திரும்பிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்!…

வலப்பனையில் மண்மேடு சரிந்து விழ்ந்து ஒருவர் பலி மூவரை காணவில்லை!….

கேரளா கஞ்சாவுடன் கைதாகிய மூவர்

சென்னை தொழிலதிபதியாக தடம் பதித்த பிரபல நடிகை அதிதி ராவ்

நகரத்தை சுத்தம் செய்யும் வேலை திட்டம் ஆரம்பம்: படங்கள் இணைப்பு

சஜித்தை காணவில்லை காரணம் என்னவென்று தெரியுமா!…..

பி.எஸ்.திசேரா தற்காலிகமாக இடமாற்றம்

temporary transfer crime division police latest news

மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

again discussion start sri lanka freedom party and mahindha team

காரணத்தை வெளியிட்டுள்ளார் மகிந்த தேசப்பிரிய….!

இந்தியா – இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையிலான புதியதோர் திருப்புமுனை…!

பஸ்களில் பெண்களிடம் படும் மோசமாக நடந்துக்கொள்ளும் இவனை தெரியுமா……?(காணொளி)

அங்கொடையில் கைதாகிய 6 பேர்

divendres, 29 de novembre del 2019

க.பொத.சா.தரப்பரீட்சை எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பம்!!..

Un-Behaviors public footage (Fort-Colomb) 143 bus route

50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்கள்!….

சொந்த வீட்டில் புதையல் தோண்டியவர்கள் கைது!….

இன்றைய ராசிபலன் (30.11.2019)

இன்றைய வானிலை அறிக்கை!….

இந்திய கூடைப்பந்து வீராங்கனை பிராச்சி தெஹ்லானின் ஹாட் புகைப்படங்கள்

ஈராக்கில் தீக்கிரையான ஈரான் தூதரகம்-ஈரான் கடும் கண்டனம்

தமிழ் மக்களின் அபிலாசைகளை புதிய ஜனாதிபதி நிறைவேற்றுவார் – மோடி நம்பிக்கை

Modi hopes the new president will fulfill the aspirations of the Tamil people

மோடியை இலங்கைக்கு அழைக்கிறார் கோட்டா

president gotabhaya rajapaksha invite prime minister modi

வெளிநாடுகளுக்கு செல்ல தடை

court reject going for foreign tours royal park murder latest news

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்படவில்லை – மனோ கணேசன்!…

சுப்பிரமணியன் ஜெயசங்கருடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

தமிழ் மாணவியின் சாதனை!….

ஜனாதிபதி , பிரதமரை சந்திக்கவுள்ள கோட்டாபய!..

President Gotabaya Rajapaksa of Sri Lanka welcomed by PM Narendra singh ...

dijous, 28 de novembre del 2019

சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்ற நடவடிக்கை

யாழில் மர்மமான முறையில் குடும்பப் பெண் மரணம்

ACTRESS PLASTIC SERGERY CLIPS

பிளாஸ்ரிக் சர்ஜரிக்கு முன்னும் பின்னும் இந்திய நடிகைகள்- திடுகிடும் புகைப்படங்கள்

ஆளுனராக நியமிக்க கேட்கவும் இல்லை நான் மறுக்கவும் இல்லை

கோட்டாபய வருகைக்கு இந்தியாவில கடும் எதிர்ப்பு!!

கோட்டாபயவிற்காக கைது செய்யப்பட்டார் வைகோ!…

dimecres, 27 de novembre del 2019

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!….

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கு இனங்க 32 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் நாராஹேன்பிட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நாராஹேன்பிட்ட பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலும் திவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க கோரி கடிதம்!!

srilanka ,11.28.2019:TM2
பாராளுமன்ற உறுப்பிப்பினரான சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி, ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று மாலை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 57 பேரின் கையொப்பத்துடன் கிடைத்த கடிதத்தின் பிரதியையும் அவருக்கு அனுப்பியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை!….

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது!…

அக்மீமன, முத்தலதனஹென பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம்!..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டு நாள் அரசமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயலாளர் P.B. ஜயசுந்தர, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் S.R. ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த பயணத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
நாளை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வரவேற்பு அளிக்கப்படும். அத்துடன் மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அஞ்சலி செலுத்துவார்.
இதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்துப் பேசவுள்ளார்.
நாளை மாலை இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்துவார்.
#thamillankanews #tamil_news #sri_lanka_local_news #president_gotabaya #flying_to_india

BEATUFUL SRI LANKA

வரலாற்றில் இன்று (28.11.2019)

நவம்பர் 28  கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.

1729 – மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.

1821 – பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.

1843 – ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.

1893 – நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.

1905 – ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.

1912 – அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1918 – புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.

1942 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர் இறந்தார்கள்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.

1958 – சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.

1960 – மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.

1975 – கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1979 – நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.

1987 – தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.

1989 – பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

1990 – ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.

1990 – லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.

1991 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
பிறப்புக்கள்
1757 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவி, ஓவியர் (இ. 1827)

1820 – பிரெட்ரிக் எங்கெல்சு, ஜேர்மன் அரசியல் மெய்யியலாளர் (இ. 1895).

1864 – ஜேம்ஸ் ஆலன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1912)

1876 – பெர்ட் வோக்லர், தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் (இ. 1946)

1962 – யோன் சுருவாட், அமெரிக்க நடிகர்

1967 – ஆன்னா நிக்கோல் ஸ்மித், அமெரிக்க நடிகை (இ. 2007)

1984 – ஆன்டுரூ போகட், ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

1987 – கிரேய்க் கீஸ்வெட்டர், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1694 – மட்சுவோ பாஷோ, யப்பானியக் கவி (பி. 1644)

1890 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர் (பி. 1827)

1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கனடிய-அமெரிக்க கூடைப்பந்து வீரர் (பி. 1861)

1954 – என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)

1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1897)
சிறப்பு நாள்
அல்பேனியா – விடுதலை நாள் (1912)

மவுரித்தேனியா – விடுதலை நாள் (1960)

அரிசி விலை குறைக்க திட்டம் – சமல் ராஜபக்ஷ!…

அரசியின் விலையினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக் தெரிவித்துள்ளார்.
இதனை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு சிறு ஆலை உரிமையாளர்களுக்கு நெல் பங்குகளை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சமல் ராஜபக் கூறினார்.
சந்தையில் அரிசி பற்றாக்குறையை அரசாங்கம் அனுமதிக்காது என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனம்!…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களுக்கான பதவியை வழங்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுத் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கம்பஹா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக பியெல் நிஷாந்தவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுவின் தலைவராக லக்ஷ்மன் வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக முத்து சிவலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சந்திம வீரக்கொடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதனும், மன்னார் மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக காதர் மஸ்தானும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக எஸ்.வியாழேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு தலைவராக ஸ்ரீயாணி விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுர மாவட்ட இணைப்புக்குழு தலைவராக வீரகுமார திசாநாயக்கவும், பதுளை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக தேனுக விதானகமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்ட இணைப்புக்குழுவின் தலைவராக சாரதி துஷ்மன்னவும், இரத்தினபுரி மாவட்ட இணைப்புக்குழு தலைவராக துனேஷ் கங்கந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.