THAMIL LANKA NEWS

divendres, 22 de novembre del 2019

பாடசாலை மாணவனால் தயாரிக்கப்பட்ட புதிய ரக ஹலிகொப்டர்

இலங்கை பாடசாலை பாடசாலை மாணவனால் சிறியரக ஹலிகொப்டர் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவனாலேயே குறித்த ஹலிகொப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாணவனால் தயாரிக்கப்பட்ட ஹலிகொப்டரை நேற்று அப் பாடசாலை மைதானத்தில் சோதனைக்குற்படுத்தப்பட்டது.
மாணவனின் செயலை பாடசாலை மாணவர்களும் , அப்பகுதியை சேர்ந்த மக்களும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானை வழிபடும் சிங்கள ஜனாதிபதியும் பிரதமரும்: படங்கள் இணைப்பு...

வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலி!… #accident_in_sri_lanka

புத்தல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தி, உந்துருளி மற்றும் மிதிவண்டி மோதியதிலே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உந்துருளியின் பின்னால் பயணித்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மிதிவண்டி ஓட்டுனர் மற்றும் உந்துருளியின் சாரதி ஆகியோர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ரணிலுக்கு கோட்டா வழங்கிய வாக்குறுதி. #ranil_wickramasighe

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்க விரைவில் தீர்வொன்று முன்வைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
united national party supporters should be protect gotabhaya rajapaksha
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது மறைமுகமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
இதனையடுத்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!… #gotabaya_rajapaksa

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

#gotabaya_rajapaksa

Beck To Beck Invitation By Modi மீண்டும் ஒர் அழைப்பு நரேந்திர மோடியிடமிருந்து... #narendra_singh_modi

Beck To Beck Invitation indian prime mnister narendara modi GotabhayaBeck To Beck Invitation By Modi மீண்டும் ஒர் அழைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து புதிய இலங்கை ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்சவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து நரேந்திர மோடி அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார்.
அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று புதுடில்லி சென்று வந்தார்.
அதனையடுத்து 200 வெளிநாட்டு பயணம் வரை செய்திருப்பார். மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எந்தவொரு நற்காரியங்களும் இடம்பெறவில்லை. ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பலபரீட்சை நடத்துவதிலேயே காலம் உருண்டோடிவிட்டது.
அதனையடுத்து புதியவரான கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கடந்த நொவெம்பர் மாதம் 16 ஆம் திகதி நுற்றுக்கு 80 வீதமான பௌத்த சிங்கள மக்களினால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி கட்டிலில் ஏறினார்.
அவர் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் இந்நதியாவிலிருந்து அந்நாட்டு தமிழரான வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜயசங்கர் பறந்து வந்து புதிய ஜனாதிபதியை சந்தித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையும் அவருக்கு வழங்கினார். இந்தியாவிற்கு வருகின்றீர்களா என்ற கேள்வியினையும் முன்வைத்தார். அதற்கு புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச ஆம் வருகிறேன் என்று வாக்குறுதியினையும் வழங்கினார். வாக்குறுதிக்கு அமைவாக எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தியாவிற்கு செல்லவுள்ள புதிய ஜனாதிபதி கோட்டாபய இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். இதனையே நான் Beck To Beck என முகப்பில் வெளிக்கொணர்ந்திருந்தேன்.
அதேநேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்தியாவிற்கு அழைத்தமையை தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்த்துள்ளனர்.
உடனடியாக இந்த அழைப்பினை கைவிடுமாறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மோடி மற்றும் கோட்டாவின் சந்திப்பினை தமிழக அரசாங்கம் எவ்வாறு நோக்குகின்றது என்பதை பொறுத்திருந்துதான் அவதானிக்க வேண்டும் – காத்திருப்போம்

கண்டி தலதா மாளிகைக்கு பிரதமர் மஹிந்த விஜயம்!… #mahinda_rajapaksa

இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக் சென்றுள்ளார்.
வழிப்பாட்டில் ஈடுப்பட்ட பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக் மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

வரலாற்றில் இன்று (23.11.2019)

நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்

நிகழ்வுகள்

800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.

1227 – போலந்து இளவரசன் முதலாம் லெஸ்செக் படுகொலை செய்யப்பட்டான்.

1248 – காஸ்டிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர்.

1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.

1867 – இரண்டு ஐரியர்களைச் சிறையிலிருந்து வெளியேற உதவியமைக்காக மூன்று ஐரியத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.

1890 – நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1936 – முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
1955 – கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

1971 – மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1978 – இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1979 – மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1980 – தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் கொல்லப்பட்டனர்.

1985 – எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.

1996 – எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

1998 – கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

2003 – வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.

2005 – லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2007 – ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1921 – சுரதா, கவிஞர் (இ. 2006)

1926 – சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி
இறப்புகள்
1973 – வி. அ. அழகக்கோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

1990 – ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916)

1990 – லெப்டினன்ட் கேணல் போர்க், விடுதலைப் புலிகளின் மாவீரர் (பி. 1959)

2014 – செல்வா கனகநாயகம், பேராசிரியர், எழுத்தாளர்

இன்றைய ராசிபலன்(23.11.2019)



மேஷம்
இன்று தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். 
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த நாள். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. 
மிதுனம்
இன்று காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும். பிள்ளைகளின் மேல் மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம்
இன்று தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர். 
சிம்மம்
இன்று உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். 
கன்னி
இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். 
துலாம்
இன்று தந்தையின் ஆதரவு உண்டு. வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.
விருச்சிகம்
இன்று விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். 
தனுசு
இன்று பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. கலைத்துறையினருக்கு மிக சிறந்த காலகட்டமிது. வாய்ப்புகள் தேடி வரும். அரசியலில் குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சியினைக் காண்பார்கள். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 
மகரம்
இன்று புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும்.
கும்பம்
இன்று புத்தி சாதுர்யத்தால் புகழையும், செல்வத்தையும் பெறுவீர்கள். எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப் பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
மீனம்
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும்.

பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் பிரிவினர் சந்திப்பு..!

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் தலைமையில் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சீ .டீ விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டார்.
விசேடமாக வர்த்தக தலைநகர், கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாதுகாப்பு செயலாளர் அனைத்து வீதி பயனாளர்களுக்கும் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் துரிதமாகவும் இறுதியானதுமான தீர்வுகளை மேற்கொள்ளும் வகையில் பொலிசாருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 
இதன்போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் டீ.ஜே கொடித்துவக்கு லந்து கொண்டார்.

ஜனாதிபதியுடன் அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் சந்திப்பு!….

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் நேற்றைய தினதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்
இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் டொஷிஹிரோ கிதமுரா பிரதி செயலாளர் தகேஷி ஒஷகி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

விசேட வர்த்தமானி – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்!..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் அனைத்து மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் மேற்படி நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார்.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஜனாதிபதியினால் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருவர் கைது!…

மன்னார், மானிப்பாய் பகுதியில் 200 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனம் ஒன்றில் கஞ்சா பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடமையை பொறுப்பேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!…

கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு மாலிகாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்றையதினம் அமைச்சை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச முன்னிலையில் நேற்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை அறிக்கை!….

நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

முள்ளிக்குளம் பகுதி கடலில் சட்டவிரோத வலைகள் மூலம் மீன்பிடிதமையால் 05 நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.
முள்ளிக்குளம் கடலில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வடமேற்கு கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு!….

பிரதமர் மோடி, கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்போது தனி விமானத்துக்கு மட்டும், சுமார் 255 கோடி ரூபாய் செலவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் அளித்த அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த  வகையில், 2016-2017 காலக்கட்டத்தில் சுமார்  76 கோடி ரூபாய் விமானத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.
2017- 2018 காலக்கட்டத்தில் சுமார் 99 கோடி ரூபாயும், 2018-2019 காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 80 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. மொத்தமாக சேர்த்து  கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்  255 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு அதிகாரிகள் இவ்வாரே தெரிவு செய்யப்படுவர்!…

அரச நிறுவனங்களுக்கான உயர்ந்தபட்ச அதிகாரிளை தெரிவுசபையின் மூலமே நியமிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இன்று அமைச்சரவை சத்திய பிரமாணம் செய்துக்கொண்ட பின்னரே இதனை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராஜங்க அமைச்சர்கள் சுதந்திரமாக வேலை செய்ய அமைச்சர்கள் இடமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அமைச்சு பதவியினை ஏற்கப்போவதில்லை

member of parliment udaya gammanpila saild dont need ministry postஇடைக்கால அரசாங்கத்தில் வழங்கப்படும் அமைச்சு பதவியினை தாம் பெற்றுக்கொள்ள போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் நிறைவடைவதற்கு இன்னும் 3 மாதங்களே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் அனைவருக்கு அமைச்சு பொறுப்புக்களை வழங்குவது கடினமான விடயமாகும்.
ஆகையினால் தாம் இந்த அமைச்சு பொறுப்பினை ஏற்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சீமெந்தின் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் சீமெந்தின்விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரசபை இதற்க்கு அனுமதி வழங்கியுள்ளதஜாக அதன் தலைவரான ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 995 ருபாய்கு விற்கப்பட்ட சீமந்தியின் புதிய விலை 1095 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த வாய்தகராறால் நடந்த விபரீதம்

திருகோணமலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் நடந்த சண்டையில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்த நபர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேரை வருகின்ற 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் , பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி சந்தேக நபர்களுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் மீன் பிடி தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறு மாறி ஒருவருகொருவர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.