THAMIL LANKA NEWS

dimecres, 13 de novembre del 2019

இன்றைய வானிலை அறிக்கை!!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும்மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இளம் வயது குடும்பம் பெண் கொலை : கணவர் உள்ளிட்ட இருவர் கைது!

கிளிநொச்சியில் – அக்கராயன்குள பொலிஸ் பிரிவிற்குபட்ட பகுதியில் இளம் வயது குடும்பம் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு, நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின், கணவர் மற்றும் அவரின் உறவினர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சத்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் அன்ரன் ஜெயராஜ் மேரி அகிலா ( வயது 29) சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட்ட நிலையில் இன்றைய தினம் அவரின் இறுதி சடங்கு இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்திளார் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தெராடர்ந்தும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காவல்துறை தலைமையகம் மீது வெடிகுண்டு தாக்குதல்!!

இந்தோனேஷியாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
வடக்கு சுமத்ராவில் உள்ள மேடன் நகரில் காவல் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. காவல்துறை அதிகாரிகளை சந்திக்கவும், புகார் மனு கொடுப்பதற்காகவும் இன்று காலை பொதுமக்கள் பலர் கூடியிருந்த நிலையில், கார் பார்க்கிங் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
இதில் காவல் துறை அதிகாரிகள் உள்பட சிலர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலை புலிகளை மேலும் 5 ஆண்டுகள் தடை செய்த இந்தியா

பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு மே மாதமும் மத்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த தடையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை தொடரலாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா பிந்த்ரா செகல் தலைமையில் ஒரு தீர்ப்பாயத்தை மே 27 ஆம் திகதி மத்திய அரசு அமைத்தது. இந்த தீர்ப்பாயம் டெல்லியிலும், சென்னையிலும் விசாரணை மேற்கொண்டது.

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு : 7 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
காபூலின் கொசாபா பகுதியில் உள்ள உள்துறை அமைச்சகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று திடீரென வெடித்து சிதறியது.
இதில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு எதுவும் பொறுப்பேற்கவில்லை.  

குளியாப்பிட்டியில் இடம்பெற்ற கொலை சம்பவம் குறித்து ஒருவர் கைது

குளியாப்பிட்டிய – மடகும்புருமுள்ள பகுதியில் தேங்காய் தோட்டம் ஒன்றில் தொழில் புறிந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடகும்புருமுள்ள பகுதியில் தேங்காய் தோட்டம் ஒன்றில் தொழில் புறிந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே தோட்டத்தில் தொழில் புறிந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குறித்த பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது குறித்து தொடர்ந்தும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

புத்தளம் முதல் மன்னார் ஊடாக செல்லும் காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என
எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பகல் அல்லது இரவு வேளைகளில் இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கடற்படையினர் மற்றும், கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு

அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் உடன்படிக்கை கைச்சத்திடப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டள்து.
குறித்த மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புவனேக அளுவிஹார, எல்.டீ.பி. தெஹிதெனிய, மூர்து பெர்ணாண்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினால் இன்று இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சட்டத்தரணிகள் குழுமம் மற்றும் பௌத்த தகவல் மையம் ஆகியவை சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், நாட்டில் அமெரிக்க படையினரை தரையிறக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்படுவதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றம் மற்றும் மக்களின் அனுமதி இன்றி, குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3729 முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்து 729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தொடர்ந்தும் தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 8ஆம் திகதியில் இருந்து நேற்று வரை 3729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3596 முறைப்பாடுகளும் அவற்றுள் அடங்குகின்றன.
அத்துடன், நேற்றைய தினத்தில் மாத்திரம் 102 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை அனைத்தும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மாலி நாட்டிற்கு சென்ற இலங்கை இராணுவத்தினர்

மைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைபிரிவில் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவத்தினர் 243 பேர் மாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.
குறித்த இராணுவத்தினர் இன்று அதிகாலை 3.20 மணியளவில் எதியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 767 – 300 என்ற விமானத்தில் இற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், விஜயபா படைபிரிவிலுள்ள வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல வீரர்கள் மாலியின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நேபா நடேஷின் கவர்ச்சி புகைப்படங்கள்