THAMIL LANKA NEWS

dimecres, 20 de novembre del 2019

வரலாற்றில் இன்று (21.11.2019)

நவம்பர் 21  கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1272 – மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.

1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1791 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.

1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.

1894 – சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.

1905 – ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.

1916 – பிரித்தானியக் கப்பலான HMHS பிரித்தானிக் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

1920 – டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1942 – அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. “ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.

1962 – சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.

1963 – பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது.

1969 – முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

1969 – ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.

1971 – வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாஹினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடித்தன.

1974 – பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.

1980 – நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
1990 – புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.

1990 – மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
996 – புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

2004 – டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.
பிறப்புக்கள்
1694 – வோல்ட்டயர், பிரெஞ்சு மெய்யியலாளர் (இ. 1778)

1902 – ஐசக் பாஷவிஸ் சிங்கர், போலந்து-அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1991)

1924 – மில்கா பிலானிஞ்ச், முன்னாள் யுகோசுலாவியப் பிரதமர் (இ. 2010)

1925 – வேல்ஜ்கோ கடிஜேவிக், முன்னாள் யுகோசுலாவிய இராணுவத் தளபதி

1931 – ரேவாஸ் தொகொனாத்சே, ஜோர்ஜிய அறிவியலாளர், (இ. 1985)

1948 – மைக்கல் சுலைமான், முன்னாள் லெபனானிய அரசுத்தலைவர்

1970 – ஜஸ்டின் லாங்கர், முன்னாள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1970 – சி. வி. இராமன் இந்திய பௌதிகவியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1888)

1996 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் (பி. 1926)
சிறப்பு நாள்
உலகத் தொலைக்காட்சி நாள்

தமிழீழம் – தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்

வங்காள தேசம் – இராணுவத்தினர் நாள்

பிராய்லர் கோழி உண்பவர்கள் கவனத்திற்கு; எச்சரிக்கைப் பதிவு!

தற்போது நம்மில் பலர் பிராய்லர் கோழி தற்போது நம்மில் பலர் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏற்கனவே பிராய்லர் கோழி உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஏனெனில் அதன் வளர்ச்சியை துரிதப்படுத்த பலவிதமான ஊக்க மருந்துகள் ஊசிகள் மூலமாக செலுத்தப்பட்டு குறைந்த நாட்களில், ஏறக்குறைய 45 நாட்களில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
தற்போது அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தி 20 நாட்களில் சந்தைக்கு அனுப்பும் முயற்சியாக கோழி தீவனத்தில் புதியதாக கண்டுபிடித்த மருந்தை சேர்த்து கொடுத்துள்ளனர். இதன் விளைவாக அந்த கோழிகளுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த கோழிகளை அழிக்காமல் பணத்திற்கு ஆசைப்பட்டு மற்ற கோழிகளுடன் சேர்த்து விற்பனைக்கு அனுப்பிவிட்டனர். இந்த கோழிகளை சாப்பிட்டால் நிச்சயமாக நமக்கும் பாதிப்பு உண்டாகும். எனவே தயவுசெய்து அடுத்த 3 மாதங்களுக்கு பிராய்லர் கோழி வாங்குவதை தவிருங்கள்.
வெளியே உணவகங்களில் இருந்தும் கோழி இறைச்சி உணவை வாங்குவதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஆடு அல்லது மீன் போன்ற இறைச்சிகளை வாங்கி உண்ணுங்கள்.

பாணின் விலை குறைப்பு!…

450 கிராம் நிறையுடைய பாணின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 ருபாவால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட பாணின் விலை மீண்டும் பழைய விலைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பழைய விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளமையை அடுத்து இந்த தீரமானம் எடுக்கப்பட்டதாக வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விடுவிப்பு

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட நீதாய மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவந்தது.
குறித்த வழக்கு விசாரணைகள் சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகளின் முன்னிலையில் இடம்பெற்றுது.
இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்படுவதாக, விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.
குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய 6 பிரதிவாதிகள் மீது எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அடுத்த அமர்வில் தெரிவிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவியேற்பு!…..

6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணம் – லலித் யு கமகே நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

கோத்தபாயவின் இந்திய அழைப்பை ரத்துச் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்; திருமாவளவன்!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருகை தருமாறு மத்திய அரசு விடுத்துள்ள அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பியுமான திருமாவளவன் அறிவித்துள்ளார்
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று கோத்தபாய ராஜபக்ச 29-ஆம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப் பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சதான் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் செய்த போர் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி அதை அன்றைய இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டேன் என்று தேர்தல் பரப்புரையில் கோத்தபய தெரிவித்திருந்தார். இன்று அவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அவசர அவசரமாக இந்திய அரசு கோத்தபாயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளது. இது ஈழத்தமிழர்களை மட்டுமன்றி தமிழக தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐநா தீர்மானத்துக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல. போர்க்குற்ற விசாரணையை நடத்த மாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கோத்தபய ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது வெளிப்படை உண்மை.
ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே அரணாக இருக்கின்ற இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சிங்கள பேரினவாதத்திற்குத் துணைபோவது ஒட்டுமொத்த தமிழர்களையும் வருத்தம் அடைய வைத்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபாய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமென்றும், கோத்தபாயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டுமென்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வை இராணுவ தளபதி சந்திப்பு!!!

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியான அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் 2019 நவம்பர் மாதம் 18ம் திகதி பதவியை பொறுப்பேற்றுகொண்ட பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் சந்தித்தார்.
இதன் போது இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதிக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டதுடன், முப்படைகளின் தளபதியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இராணுவமானது தேசிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதிபடுத்தினார்.
புதிய ஜனாதிபதியின் கடமை பொறுப்பேற்றுதலை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய ஜனாதிபதிக்கு நினைவு சின்னத்தை வழங்கினார்.

இருவர் கைது!…

நேற்றைய தினம் மன்னாரின் சவுத்பாரின் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது நேற்றைய தினம் 14.5 கிலோ கிராம் கடல் ஆமை இறைச்சியுடன் 02 நபர்களை கடற்படை கைது செய்தது.
வட மத்திய கடற்படை கட்டளை சவுத்பார் கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு படகு கரைக்கு திரும்புவதைக் கண்டதுடன், இந்த கடல் ஆமை இறைச்சியை கண்டுபிடித்ததுள்ளது.
இதையடுத்து, சந்தேக நபர்கள் இருவரையும் அவர்களது மீன்பிடிக் கப்பலுடன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீன்பிடிக் கப்பல் மற்றும் ஆமை இறைச்சி ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைத்தனர்.
மனித நடவடிக்கைகளால் அச்சுறுத்தல் அல்லது ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்ட கடல் ஆமைகளைப் பாதுகாக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனவே, இந்த வகை கடல் விலங்குகளை பாதுகாப்பது மனிதகுலத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்!..

இன்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கூடவுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கட்சி தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தயார்படுத்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பிரதித் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியின் கீழ் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பிலும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு எச்சரிக்கை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை

அறிக்கை

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம்.
எதிர்வரும் நாட்களில் பாதுகாப்புக் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதில் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், மற்றும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புடன் இருக்குமாறும், அந்தந்தப் பகுதிகளின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தூர நோக்கிற்கு அமைய இன, மத மற்றும் அரசியல் வேறுபாடுகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கும் வகையில் நாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபர்களுக்கும் அல்லது குழுக்களுக்கும் எதிராக, தராதரம் பாராமல் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று விசேட கூட்டம்!….

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை 9 மணிக்கு ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு – சஜித் பிரேமதாச!…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று சஜித் பிரேமதாசவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பினைத் தொடர்ந்து பொதுமக்களை சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக சஜித் பிரேமதாச அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்!…



புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஓஷாத சேனநாயக்க பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஓய்வுபெற்ற டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பியிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை நேற்று பெற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது குறித்த நியமனக்கடித்தினை பெற்றுக்கொண்ட அவர், இன்று முதல் தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.

இன்றைய வானிலை அறிக்கை!!..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்றைய ராசிபலன்(21.11.2019)

மேஷம்
இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். 
ரிஷபம்
இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும் 
மிதுனம்
இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். 
கடகம்
இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். 
கன்னி
இன்று அறிவு திறமை அதிகரிக் கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம். திறமையாக செயல் பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். 
துலாம்
இன்று எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும். 
விருச்சிகம்
இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப் படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். 
தனுசு
இன்று எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவு படுத்திக்கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.
மகரம்
இன்று இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். 
கும்பம்
இன்று எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
மீனம்
இன்று தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து இருக்கும். 

நியூசிலாந்தில் பொழியும் ஆலங்கட்டி மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நியூசிலாந்தில் தற்போது ஆலங்கட்டி மழை பெய்த வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டைமரூ, ஓமரூ பகுதிகளில் பெய்து வரும் ஆலங்கட்டி மழை ஒரு கோல பந்து அளவிற்கு இருப்பதால் அவை வீட்டின் ஜன்னல்இ கண்ணாடி மற்றும் மேற்கூரையை சேதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று Selwyn, Ashburton ஆகிய பகுதிகளில் இடிஇ மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

KGF-2 படத்தின் தீம் மியூசிக் புரோமோவை வெளியிட்ட இசையமைப்பாளர்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் KGF. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.தற்போது இப்படத்தின் முக்கிய தீம் மியூசிக்கின் புரோமோ ஒன்றை இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி கன்க்ளூஷன்’ என பதிவுட்டு தீம் மியூசிக்கின் புரொமோவை பகிர்ந்துள்ளார். 

பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் முன்வைத்த நிபந்தனை!…

பிரதமர் பதவிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுவதேவ நாணயக்கார இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோட்டாபயவின் அரசாங்கத்ததில் தாம் எதிர்கட்சி தலைவராக செயலாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவிகாலம் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த நிபந்தனைகளை ரணில் முன்வைத்துள்ளார்.
19 ஆவது அரசியல் அமைப்பிற்கு அமைய பிரதமரின் ஆலோசனைக்கமையே ஜனாதிபதி சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதால் பிரதமராக ரணில் பதவியிலுள்ளமை முட்டுக்கட்டையாக இருப்பதாக கோட்டாபய அரசாங்கம் கருதுகிறது.

போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய எம்பிஏ மாணவி!!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனது நடனத்தின் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்பிஏ மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புனேவில் எம் பி ஏ படித்துவரும் சுபி ஜெயின் என்ற மாணவி 15 நாள் கல்விசார் பயிற்சிக்காக இந்தூர் வந்துள்ளார்.
அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை கண்ட மாணவி சுபி ஜெயின், அதனை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட முயன்றார்.
அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வருகிறார்.
தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதையும், சீட்பெல்ட் போட வேண்டும் என்பதையும் தனது நடன அசைவு மூலம் சுபி ஜெயின் வலியுறுத்துவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முழு அரச மரியாதையுடன் ஓய்வுபெறும் 7 நாய்கள்

மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையின் ஒரு பகுதியாக இருந்த 7 நாய்கள் முழு அரசு மரியாதையுடன் ஓய்வு பெற்றன.
பாரா ராணுவப்படையுடன் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் நாய்கள் ஓய்வு பெற்றுள்ளன.
டெல்லி மெட்ரோவுடன் இணைக்கப்பட்ட சிஐஎஸ்எஃப் குழுவின் ஒருபகுதியாக நாய்கள் இருந்தன. டெல்லி மெட்ரோவின் சிஐஎஸ்எஃப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த விழாவில் நாய்களுக்கு நினைவுச் சின்னங்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.