THAMIL LANKA NEWS

dilluns, 18 de novembre del 2019

நாளை வரை விசேட பஸ் சேவை ஆரம்பம்

பயணிகளுக்காக இன்றைய தினமும் மற்றும் நாளைய தினங்களில் விசேட பஸ் சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்க்காக 5800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக இந்த விசேட பஸ் சேவை மேற்கொள்ளப்பள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

புதிய ஜனாதிபதியின் புதிய செயலாளர் நியமனம்!….

ஜனாதிபதியின் புதிய செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட அதிகாரியாகவும், பொருளாதார நிலையத்திலும் கடமையாற்றியுள்ள அவர் அமெரிக்காவில் தமது உயர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.
அத்துடன் நிதியமைச்சினதும், திறைசேரியினதும் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அதேநேரம் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் கமல் குணரட்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 53 வது படைப்பிரிவை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்தமாறு ஜனாதிபதி அறிவிப்பு!

ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார்.
அரச அலுவலகங்களில் இனிமேல் தனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார
அதன் நான்கு மூலைகளும் பௌத்தம் மற்றும் தேசத்தின் செல்வாக்கைக் குறிக்கின்றன. இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உத்தனா சம்பதா , ஆரக்கா சம்பதா , கல்யாண சம்பதா மற்றும் சாம ஜீவிதா ஆகிய நான்கும் பௌத்த சிந்தனைகளை சித்தரிக்கிறது:
நான்கு மூலைகளிலும் உள்ள நான்கு குறியீடுகள் சர்வதேச உறவுகளையும் விருந்தோம்பலையும் குறிக்கின்றன. ஒரேஞ் நிறம் தமிழ் மக்களையும் பச்சை நிறம் முஸ்லிம் சமூகத்தையும் குறிக்கிறது.

நான்கு அடி அகலமுள்ள வெள்ளை கோடுகள் அனைத்து திசைகளின் பாதுகாப்பையும் குறிக்கிறது.
சமமாக உள்ள மஞ்சள் துண்டு ஒற்றுமையையும், இன நல்லிணக்கத்தின் ஒற்றுமையையும் குறிக்கிறது.மஞ்சள் என்பது வாழ்க்கையின் உயிர்ச்சக்தியைக் குறிக்கிறது.
Thamillanka.com

புதிய ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

சீன நாட்டின் ஜனாதிபதி ஷி – ஜின்பிங் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவிதுள்ளார்.
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்று கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய வழங்கிய முதல் நியமனம்!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நியமித்த முதலாவது நியமனம் இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் பதவியாகும் அப்பதவிக்கு இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிபராக கோத்தபாய ராஜபக்சே நேற்று பதவி ஏற்றார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோத்தபாய ராஜபக்சதான் பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.
அப்போதுதான் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் 53-வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர். மேலும’ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், மூத்த தளபதி சூசை உள்ளிட்டோரை தங்களது படைப்பிரிவுதான் கொன்றதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் இந்த கமால் குணரத்ன.

வரலாற்றில் இன்று (19.11.2019)

நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1493 – கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.

1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1881 – உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.

1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை – சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.

1946 – ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.

1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.

1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.

1977 – எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.

1977 – போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.

1985 – பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.

1999 – மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.
2005 – மகிந்த ராஜபக்ச இலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
பிறப்புக்கள்
1831 – ஜேம்ஸ் கார்ஃபீல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (இ. 1881)

1835 – ராணி லட்சுமிபாய், இந்திய இராணி (இ. 1858)

1909 – பீட்டர் டிரக்கர் ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (இ. 2005)

1917 – இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் (இ. 1984)

1925 – சலில் சௌதுரி, வங்காள இசையமைப்பாளர் (இ. 1995_
இறப்புகள்
1998 – டெட்சுயா புஜித்தா, யப்பானிய வானிலை அறிஞர் (பி. 1920)

2008 – எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919)
சிறப்பு நாள்
மாலி – விடுதலை நாள்

இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினம்

உலகக் கழிவறை நாள்

இன்றைய ராசிபலன்(19.11.2019)


மேஷம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். 
ரிஷபம்
இன்று மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
மிதுனம்
இன்று முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.
கடகம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். 
சிம்மம்
இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றி னாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.
கன்னி
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். 
துலாம்
இன்று வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். 
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும்.பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும். 
தனுசு
இன்று குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். 
மகரம்
இன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.
மீனம்
இன்று எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 

கட்டுப்பணத்தை இழந்த வேட்பாளர்கள்!!!


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 பேரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1981ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, செல்லுபடியான வாக்குகளில் 12.5 வீதமாக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்களுக்கே கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும்.
இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷவும் (52.25) அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சஜித் பிரேமதாசவும் (41.99) மாத்திரமே கட்டுப்பணத்தை மீளப் பெறுவதற்குத் தகுதியான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஏனைய அனைவரும் 12.5 வீதத்துக்குட்பட்ட வாக்குகளையே பெற்றுள்ளதால், அவர்களுக்கு கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீடி இலைகளுடன் நான்கு பேர் கைது!!!

நீர்கொழும்பு கடலில் கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 1620 கிலோகிராம் பீடி இலைகளுடன் நான்கு பேர் கைது செய்து செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கை மேற்கொண்ட போது சந்தேகத்திற்குரிய ஒரு டிங்கி படகை மேற்கு கடற்படை கட்டளை மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் கவனித்தனர்.
குறித்த படகை மேலும் ஆய்வு செய்யப்பட்ட போது 54 பொட்டலங்களில் அடங்கிய பீடி இலைகளை காணப்பட்டன. அங்கு குறித்த படகு மற்றும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் 32, 52, 58 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இன்றைய வானிலை அறிக்கை!!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பொதுத் தேர்தல் விரைவில்… – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் வேறொரு கட்சியிலும் இருக்கும் போது நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாது.
இதனால் பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபேராம விஹாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் தேவையைக் கருத்திற்கொண்டு எந்தவொரு தேர்தலுக்கும் தமது ஆணைக்குழு தயாராகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கோ அல்லது மாகாண சபை தேர்தலுக்கோ எந்த சந்தர்ப்பத்திலும் தாம் தயாராகவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகள் பொறுப்பேற்பு!..

இலங்கையின் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ருவண்வெலிசேயவில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பொறுப்புக்களை கையேற்கவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் கண்டி ஸ்ரீ தலதாமாளிக்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் புதிய செயலாளராக பேராசிரியர் பி.பி. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.