THAMIL LANKA NEWS

dijous, 21 de novembre del 2019

இலங்கையில் கடல் பகுதியில் வாழும் மக்களுக்கான முக்கிய தகவல்

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இரண்டு மணிக்கு பின்னர் சப்ரகமுவ மாகாணங்களில் சில பகுதிகளில் அதிகமான காற்று வீசுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது
கடல் பிராந்தியங்களை பொறுத்தவரையில் முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை வரையான இடங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் மணித்தியாலத்திற்கு 20km முதல் 30 km வரையான நீர்வீழ்ச்சி காணப்படும்.

பொது மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

Central Bank warns people not to cheat on LinkedInசமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலகு கடன் பெற்றுத்தருவதாக கூறியே இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்கள் வாயிலாக அனுகும் நபர்களிடம் மக்கள் தங்களது விபரங்களை வழங்காதிருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் திங்கள் கிழமை சத்தியபிரமாணம்

இராஜாங்க அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கள்க கிழமை பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 15 பேர் சத்தியபிரமாணம் செய்து கொண்டதனை் பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கை!!!

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பின் போது ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தி அதற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலின் போது 250 இற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருந்ததுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவி பிரமாணம்.!….

நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக முன்னாள்  ஜனாதிபதியும் தற்போதைய  பிரதமரும்  மகிந்த ராஜபக்ச  நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி மறுசீரமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் சுதேச மருத்துவம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புத்தாக்கல் அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹாவலி கமத் தொழில், நீர்பாசனத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக டளஸ் அலகபெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு, தொழில் வழங்கல் மேம்பாட்டு அமைச்சராக விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள், காணி மற்றும் காணி விவகார அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதி வேளாண்மை அமைச்சராக டொக்டர் ரமேஷ் பதிரன நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பு!..

புதிய அமைச்சரவை பதவி ஏற்பில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுள்ளார்.
தற்போது 15 பேர் கொண்ட அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் போன்றோரும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுடன் ஒன்றிணைந்த எதிரணியாக செயற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த அமைச்சரவை அடுத்த பொதுத்தேர்தல் வரையில் பதவியில் இருக்கும்.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அதன் பின்னர் சபை கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!….

மொரட்டுவ – அங்குலானையில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மொரடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலை கட்டிடம் நான்கு மாடிகளை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், பிரதேச வாசிகள், பொலிஸார், தெஹிவலை, மொரடுவை, மருதானை மற்றும் கல்கிஸ்ஸ தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயிணை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மொரடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேதவிபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!!

இன்று காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் கொழும்பின் பல பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
கொழும்பு நகரின் அபிவிருத்தி நடிவடிக்கை காரணமாக கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொளன்னாவ நகர சபை பிரதேசங்களான மொரகஸ்முல்ல, ஒபேசேக்கரபுர, பண்டாரநாயக்கபுர, ராஜகிரிய, நாவல, கொஸ்வத்த, மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம்  வரை பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!…..

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கோத்தபாயவின் இந்திய அழைப்பை ரத்துச் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்; திருமாவளவன்!

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷா பதவிப்பிரமாணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலரிமாளிகையில் இருந்து விடைபெறும் ரணில்விக்கிரமசிங்க!

ரணில் விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவுபடுத்தியிருந்தார்.
அந்த வகையில் , ரணில் விக்கிரமசிஙக் இன்று முற்பகல் 12 மணியளவில் அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதம செயலாளராக காமினி செனரத் நியமனம்

srilanka ,11.21.2019:TM2
புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளரான முன்னாள் பிரதானி காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

srilanka ,11.21.2019:TM2
இலங்கையின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமரான மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்திலேயே குறித்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கான புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட எதிர்ப்பார்த்துள்ளதாக நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் வாதிகள் என்ன செய்தனர் ஈழ தமிழர்களுக்கு-நாமல் ராஜபக்ஷ

இலங்கையில் நடந்து முடிந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து தற்போதைய புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மகனும் எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தமிழக அரசியல் வாதிகளை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் கோட்டாபாய ராஜபக்ஷ தமிழக அரசியல்வாதிகள் தான் தமிழர்-சிங்களவர் என இனங்களுக்கிடையில் பகைமையை தங்களது சுயநலத்திற்காக வளர்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை பயன்படுத்தி ஒரு உள்நாட்டுப்போரை நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும் அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது என பதிலலித்தார்
தற்போது மீண்டும் தமிழக தலைவர்களுக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ பேட்டியளித்துள்ளார் அவர் அதில் கூறியதாவது மக்களின் முடிவை ஏற்றுகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என ஆரம்பித்த அவர்
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமானது ஆனால் தமிழக அரசியல்வாதிகள் சிலர் இதை தமிழர்-சிங்களவர் யுத்தமாக மாற்றி தங்களது சுய நலத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஈழத் தமிழருக்கு தமிழக அரசியல்வாதிகள் இதுவரை என்ன தான் செய்திருக்கின்றனர் எனவும் மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை

srilanka ,11.21.2019:TM2
ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது।
ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகரிடம் கோரிக்கை வாய்த்த நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்வி பொது சாதாரண தர பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பம்

srilanka ,11.21.2019:TM2
கல்வி பொது சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சையை முன்னிட்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் புஜித்த தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் , 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. 554 இணைப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.