THAMIL LANKA NEWS

dijous, 14 de novembre del 2019

வரலாற்றில் இன்று (14.11.2019)

நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1885 – செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.

1889 – நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.

1918 – செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.

1922 – பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.

1956 – ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.

1963 – ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.

1965 – வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.

1969 – அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.

1970 – மேற்கு வேர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

1971 – மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.

1975 – மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.

1990 – கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

1991 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.

1996 – டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2001 – ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
இன்றைய தின பிறப்புகள் : 
1840 – கிளாடு மோனெ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)

1889 – ஜவகர்லால் நேரு, 1வது இந்தியப் பிரதமர், அரசியல்வாதி (இ. 1964)

1904 – ஹரால்ட் லார்வூட், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1995)

1907 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடிய எழுத்தாளர் (இ. 2002)

1930 – எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)

1931 – இரா. பெருமாள் ராசு, இந்தியக் கவிஞர்

1947 – பி. ஜெ. ஓரூக், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்

1948 – சார்லசு, வேல்சு இளவரசர்

1954 – காண்டலீசா ரைஸ், ஐக்கிய அமெரிக்காவின் 66வது செயலாளர்

1971 – அடம் கில்கிறிஸ்ற், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

1972 – ஜோஷ் டுஹாமெல், அமெரிக்க விளம்பர நடிகை
இன்றைய தின இறப்புகள் :
565 – முதலாம் ஜஸ்டினியன், பைசாந்தியப் பேரரசன் (பி. 482)

683 – முதலாம் யசீத், உமையா கலீபா (பி. 647)

1716 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலர், மெய்யியலாளர் (பி. 1646)

1831 – எகல், ஜெர்மன் நாட்டு மெய்யியல் அறிஞர் (பி. 1770)

1977 – பிரபுபாதா, இந்திய மதகுரு, அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் நிறுவனர் (பி. 1896)
சிறப்பு நாள்
இந்தியா: குழந்தைகள் நாள்.

உலக நீரிழிவு நாள்

கூட்டுறவு வார விழா (இந்தியா) – (நவம்பர் 14 முதல் 20 முடிய)

இன்றைய ராசிபலன்(14.11.2019)

மேஷம்
இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். 
மிதுனம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞ்சர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.
கடகம்
இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம்.
சிம்மம்
இன்று துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.
கன்னி
இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. 
துலாம்
இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்
தனுசு
இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். 
மகரம்
இன்று உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். 
கும்பம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. 
மீனம்
இன்று கணவன், மனைவிக் கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். 

வாக்காளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்த சேவை செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த போக்குவரத்து சேவை இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், வாக்களிப்பதற்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி இந்த விசேட போக்குவரத்து சேவை செயற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜேர்மன் நாட்டு பிரஜை நீரில் மூழ்கி பலி!

வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் அலுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த வேலையில் நேற்று சம்பவம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் 78 வயதுடைய ஜேர்மன் நாட்டு பிரஜையே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

கோட்டா ஜனாதிபதியானால் உரிமைகள் ஊமையாகிவிடும்

தமிழ் மக்கள் நிர்ணயிக்கும் சக்தியாக இருப்போம் என்பதை மீண்டும் வெளிக்காட்ட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் வாக்களிப்பில் தமிழ் மக்கள் எல்லோரும் சென்று வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்கள் நிர்ணயிக்கும் சக்தியாக என்றும் இருப்போம் என்பதை நாங்கள் காட்ட வேண்டும்.
கடந்த காலத்தில் தென்னிலங்கை மாற்ற முடியாது என்று நினைத்த நேரத்தில் எங்களுடைய மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தி தென்னிலங்கையின் ஆட்சியாளரை மாற்றக் கூடிய வல்லமை எங்களிடம் இருக்கு என்பதைக் காட்டினோம்.
அதற்கான நிலைமை மீண்டும் உருவாகியுள்ளது. இன்றைய நிலையில் எங்களுடைய உரிமைகளை போராட்டம் ஊடாகச் செய்து வென்றெடுக்க கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
கோட்டபாய ராஜபக்ஸ இப்பொழுது வந்தார் என்றால் அவருடைய குடும்ப ஆட்சி தொடர்ச்சியாக இருக்கும். அதைவிடகொடுங்கோல் ஆட்சி எங்கள் தேசத்தில் முளைக்கும்.
இராணுவ பிரசன்னம் கூடுதலாக இருக்கும் நிலையில் அவர்கள் வெளியில் வந்து செயற்படும் நிலை அதிகரிக்கும்.
நாங்கள் எங்களது போராட்டங்களை செய்வதற்கான அனுமதிகள் மறுக்கப்படும். காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் என எங்களது உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்தின் அனைத்து கதவுகளும் மூடிவிடப்படும்.
எங்களுடைய இலச்சியத்திற்காக, மண்ணுக்காக மரணித்த தியாகிகளின் நினைவு தினங்களை நினைவு கூரமுடியாமல் தடுக்கப்படுவோம்.
மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எதிர்வரும் 27ஆம் திகதி வித்திடப்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தக் கூடிய வாய்ப்பு தற்போது இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் எமது உறவினர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்திய போது கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஆகவே இப்பொழுது இருக்கும் நிலையை மீண்டும் உருவாக்குவதன் ஊடாகத்தான் எங்களுடைய உரிமைப் போராட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: வவுனியா பிராந்திய செய்தியாளர்

கோட்டபாயவின் வெற்றியை மழுங்கடிக்க முடியாது


சேறு பூசும் நடவடிக்கை மூலம் கோட்டபாயவின் வெற்றியை மழுங்கடிக்க முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடந்தம் அவர் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதைப் பொறுக்க முடியாத எதிர்கட்சியினர் சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர் அணியினரின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதை தாங்கிக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் மனவிரக்திக்கு உள்ளாகி எம் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், வழமைபோல் மேற்கத்தைய நாடுகளும் மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.
கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். கோத்தபாயவின் வெற்றியை உறுதி செய்துள்ள கல்வியாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாட்டாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
வன்னி மாவட்டத்தில் இனவாதமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிராக கவனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
கோட்டபாயவை வெல்ல வைப்பதற்காக செயற்படும் எமது கூட்டு கட்சிகள் இனவாதம் பேசுவதை நிறுத்தி தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
வன்னி மாவட்டத்தில் கூட்டுக்கட்சிகள் இனவாதம் கக்கவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களிடம் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காலி மாவட்டம் எல்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மை மக்கள் மாற்றத்திற்குள் வந்துள்னர் என்பதை தேர்தல் முடிவுகள் அறிவித்துள்ளன.
நாம் ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச 60 விதமான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: வவுனியா பிராந்திய செய்தியாளர்

புதையல் தோண்டிய 3 பேர் கைது!!!

ஹொரனை – கந்தான பிரதேசத்தினை சேர்ந்த 3 பேர் புதையல் தோண்ட முயற்சித்தால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 36 மற்றும் 48 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு

வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரமவின் பிரியாவிடை நிகழ்வுகள் பொலிஸ் தலைமையகத்தின் மைதானத்தில் இடம்பெற்றுள்ளன.
குறித்த நிகழ்வு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால் சில்வா தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபாராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட அனுரா அபேயவிக்கிரமவின் பதவிக்காலம் எதிர்வரும் 18ஆம் திகதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு அவருக்கான விஷேட அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுள்ளது.


அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பிரியாவிடை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர்களான மல்வலகே. வீரக்கோன், வவுனியா, நெடுங்கேணி, கனகராஜன்குளம், ஓமந்தை, பூவரசன்குளம், செட்டிகுளம் போன்ற பகுதியின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸார், சர்வ மதத்தலைவர்கள், வர்த்தகப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

செய்தி, புகைப்படங்கள்: வவுனியா பிராந்திய செய்தியாளர்

வெல்லவாயவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!

வெல்லவாய சிரிபுர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இரு நபருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினை தொடர்ந்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் 41வயதுடைய என தெரியவந்தள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிகாரத்தை வைத்து கொண்டு மத்திய வங்கியில் நிதி மோசடி

ஊழல், மோசடியை தடுப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதிகாரத்தை கொண்டு மத்திய வங்கியில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகமயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஜனவரி மாதம் ஆட்சியை பெற்றுக்கொண்டதன் பின்னர், பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி, 50 நாட்கள் செல்லும் முன்னர் மத்திய வங்கியில் மோசடி இடம்பெறுகின்றது.
ஆயிரத்து 100 கோடி நட்டம் ஏற்பட்டது. அர்ஜுன மகேந்திரனுக்கு அதில் தொடர்புள்ளது. அர்ஜுன் அலோஸியஸ் அதில் இலாபமடைந்துள்ளார்.
பிரதமருக்கும் அதில் தொடர்புள்ளதாகவும் மார்ச் மாதம் நாடாளுமன்றில் வைத்து தன்னால் தகவல் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்ள்ளார்.