THAMIL LANKA NEWS

divendres, 8 de novembre del 2019

RAMAR PALAM

வரலாற்றில் இன்று (09.11.2019)

நவம்பர் 09 கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1793 – கிறிஸ்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.

1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

1872 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் ந்கரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.

1887 – ஐக்கிய அமெரிக்கா ஹவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.

1888 – கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.

1913 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.

1921 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1937 – ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.

1938 – நாசி இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

1953 – கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1963 – ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.

1963- ஜப்பான் யோகோஹாமா என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.

1967 – நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1985 – சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கஸ்பரோவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

1989 – பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.

1990 – நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

1994 – டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

2000 – உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

2005 – வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.

2005 – ஜோர்தானின் அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய தின பிறப்புகள் : 
1877 – முகமது இக்பால், பாக்கித்தானிய மெய்யியலாளர், கவிஞர், அரசியல்வாதி (இ. 1938)

1897 – ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ், ஆங்கிலேய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1978)

1934 – கார்ல் சேகன், அமெரிக்க வானியலாளர், எழுத்தாளர் (இ. 1996)

1952 – ஜாக் சோஸ்டாக், உயிரியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.

1959 – ஈ. காயத்ரி, வீணைக் கலைஞர்.
இன்றைய தின இறப்புகள் : 
1918 – கியோம் அப்போலினேர், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880)

1953 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அரேபிய மன்னர் (பி. 1880)

1962 – தோண்டோ கேசவ் கார்வே, இந்திய செயற்திறனாளர் (பி. 1858)

1970 – சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதி, அரசியல்வாதி (பி. 1890)

1988 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (பி.1937)

1992 – தா. சிவசிதம்பரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1926)

2004 – ஸ்டீக் லார்சன், சுவீடிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1954)

2005 – கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921)

2006 – வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920)
சிறப்பு நாள் :
கம்போடியா – விடுதலை நாள் (1953).

விசேட ரயில் சேவைகள்

நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ரயில் திணைக்களம் கூறியுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு, கோட்டையில் இருந்து இரவு 7.35 பயணத்தை ஆரம்பிக்கும் விசேட ரயில், அதிகாலை 4.33 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.
அத்துடன், இரவு 8 மணிக்கு பதுளையில் புறப்படும் ரயில் அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

திடீர் மின்சாரம் துண்டிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை திடீர் மின்சாரம் துண்டிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தின் பிரதான மின்கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை 8.50 மணியளவில் இந்த மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுமார் 30 நிமிடங்கள் இந்த மின்சார தடை நீடித்துள்ள நிலையில், விமான நிலைய குடிவரவு குடியகழ்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து பணிகளும் தாமதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பதவிக்கு வந்ததும் புதிய பிரதமர்

தாம் பதவிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட, புதியவர் ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபிதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
புதிய பிரதமர், முதல் முறையாக அந்தப் பதவிக்கு வருபவராகவும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவராகவும் இருப்பார்.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட எவரையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை.
தமது அமைச்சரவை திறைமையான இளைஞர்களைக் கொண்டதாக இருக்கும்.
அவர்கள் தமது சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம்: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தல்

தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தி ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கும் கடிதத்தை வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணமாக ஏற்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த அறிவித்தலை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வாதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றுடன், புகைப்படத்துடன்கூடிய தேசிய அடையாள அட்டையின் தகவல்கள் அடங்கிய கடிதம் ஆட்பதித்வுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுகின்றது.
அத்துடன், வாக்களிக்கும்போது, வாக்குச்சீட்டில் தவறிழைக்கப்பட்டால், அதற்காக மற்றுமொரு வாக்குச்சீட்டு வழங்கப்பட மாட்டாது.
வாக்காளர்கள் வாக்களிக்கும்போது, தாங்கள் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் வேட்பாளரின் பெயரும், சின்னமும் வாக்குச்சீட்டில் இருக்கின்ற நிரலை தெரிவு செய்து விசேட கவனம் செலுத்தி வாக்களிக்க வேண்டும்.
தான் வாக்களிக்க எண்ணிய குறித்த வேட்பாளருக்கு மாறாக, வேறு ஒருவருக்கு தம்மால் வாக்களிக்கப்பட்டதாக எவராவது ஒருவர் கூறுவாராயின், அவருக்கு மேலதிகமான வாக்குச்சீட்டை வழங்குவதற்கு சிரேஷ்ட தேர்தல் அதிகாரிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
இதேவேளை, வாக்காளர்கள் தங்களது வேட்பாளருக்கு வாக்கை வழங்குவதற்கு தவறும்போது, வேறொரு வாக்குச்சீட்டை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!…

ஹெம்மாத்துகம பிரதேசத்தில் 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்.
ஹெம்மாத்துகம பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை.
இந்த தொடர்பில் முறையானை விசாரணைகளை முன்னெடுக்காத காவற்துறை உத்தியோகத்தர்கள் 03 பேர் பணி  நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை அறிக்கை!!!


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Ramar Palam | history inTamil

Examining evidences of Ram Mandir in Ayodhya

அயோத்தி தீர்ப்பு – அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்..!


அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தீர்ப்பு எதுவாயினும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றி- தோல்வி அல்ல என்று கூறியுள்ள அவர், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவத்தை நாட்டில் மேலும் வலுப்படுத்த நாம் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீர்ப்புக்கு நமது எதிர்வினைகள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், பகையைத் தூண்டும் வகையில் யாரும் பேசக்கூடாது எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று………..



சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று இந்திய உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் 10.30 அளவில் உயர்நீதிமன்றம் வழங்கப்படவுள்ளது.
வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, ஆலோசனைக்கு பின்னர் தீர்ப்பை அறிவிக்க உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எதிர்வரும் 17ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த தீர்ப்பு இன்று அவரினால் அறிவிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் உத்தர பிரதேச அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து சட்ட ஒழுங்கு குறித்து விசாரித்த பின்னர் தீர்ப்பை வழங்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் விஸ்தீரமான நிலத்திற்கு கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்புகள் உரிமை கோரி வருகின்றன.
இந்த நிலையில், அயோத்திக்காக சுமார் 28 ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கை முன்னதாக விசாரணைக்கு உட்படுத்திய அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தனது தீர்ப்பை வழங்கியது.
இதனடிப்படையில், வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிட்டது.
குறித்த தீர்ப்பை ஏற்கமறுத்து 14 பேர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த பிரச்சினையை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதற்கு உயர்நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது.
இதேவேளை, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து தீர்ப்பாயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து, நாளாந்த வழக்கு விசாரணையாக கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முதல் அயோத்தி வழக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதியுடன் விசாரணை நிறைவுபெற்றபோதும், தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வகையில், குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயோத்தி வழக்கில் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அது எவருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்காது என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.