THAMIL LANKA NEWS

dimarts, 5 de novembre del 2019

ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பெட்டிகளை எடுத்துக் செல்ல 1100 பேருந்துகள்

எதிர்வரும் 16திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குப் பெட்டிகளை எடுத்துக் செல்வதற்காக 1100 பேருந்துகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இததேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த பேருந்துகளை மேற்படி நடவடிக்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பிரனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள மக்களை ஏமாற்ற முயற்சிக்கு சுமந்திரனுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

சிங்கள மக்களை ஏமாற்ற முயற்சிக்கு சுமந்திரனுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

உடுதும்பர காசியப தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை கைவிட்டார்

அமெரிக்காவுடன் எம்சிசி கொடை உடன்பாட்டில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உடுதும்பர காசியப தேரர் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நேற்றிரவு கைவிட்டார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், எம்சிசி உடன்பாடு தொடர்பாக, அதிபர் வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவும், கோத்தாபய ராஜபக்சவும், உடுதும்பர காஷ்யப்ப தேரருக்கு தனித்தனியாக உறுதிமொழிக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

கணவன் குளிக்காததால் வழக்கு தொடர்ந்த பெண்! கடுப்பாகிய நீதவான்! யாழில் பரபரப்பு!

தனது கணவர் குளிப்பதில்லை என தெரிவித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்திருப்பது தற்போது யாழில் பரபரப்பாக பேசப்படுகிறது.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில், தனது கணவர் குளிப்பது இல்லை எனவும் தன்னால் அவருடன் வாழ முடியாது எனவும் தனக்கு அவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழங்குவதற்கு எதிர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் மனு மீதான விவாதம் இன்று நடத்தபட்டது. இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் குறித்த மனுவை தள்ளுபடி செய்தது.
‘நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது’ என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் தனது கட்டளையில் கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

பீடி இலைகளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது!!!

உடப்பு கடற் பரப்பில் 600 கிலோ கிராம் பீடி இலைகளை தம்வசம் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை பரிசோதனை செய்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதான தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 26 வயது மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இதன்போது, பீடி இலைகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சிலாபத்தில் 6 பேர் கைது!!!

சிலாபம் வெல்லமொயகட பிரதேசத்தில் சட்டவிரோதமன முறையில் கடல் மார்க்கமாக பிரான்ஸ் நோக்கி பயணிக்க முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதன்போது இரு படகுகள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மக்களை பாதுகாக்கும் ஜனாதிபதியையே மக்கள் தெரிவு செய்யவர்


சகல தேர்தல்கள் தொகுதிகளிலும் உள்ள மக்களை சந்திப்பதற்காக தாம் அவர்கள் அருகில் செல்வதற்கு தயாராகவுள்ளேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்து 24 மணித்தியாலத்துக்குள் வழங்க வேண்டிய சகல தீர்வுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நாட்டு மக்களை பாதுகாக்கும் ஜனாதிபதியையே பொதுமக்கள் தெரிவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியஸ்தர் முகவரி -3 நூலின் வெளியீட்டு விழா

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் “முக்கியஸ்தர் முகவரி -3” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 10திகதி நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு கொழும்பு கொட்டாஞ்சேனை ஐங்கரன் மண்டபத்தில் எதிர்வரும் 10திகதி ஞாயிற்று கிழமை மாலை 5.30மணியளவில் இடம்பெறவுள்ளது.
ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்வில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் துணைத்தலைவர் செந்தில் வேலவர், புரவலர் புத்தக பூங்கா நிறுவனர் புரவலர் ஹாஸிம் ஒமர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேஷன் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேஷன், வத்தளை பிரதேச சபை உறுப்பினர் ஆர். விஜயகுமார், வத்தளை மாபோலை நகரபை உறுப்பினர் எஸ். சசிகுமார், வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன், கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம் அறங்காவலர் ஈ. கணேஷ் தெய்வநாயகம், முன்னாள் பொலிஸ்மா அதிபர் கே. அரசரட்ணம், மித்திரன் வாமலரின் ஆசிரியர் பொன்மலர் சுமன், பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரைிமையாளர் ஆர்.பி.ஸ்ரீதர்சிங் மற்றும் கலை, இலக்கிய சமூக சேவையாளர் கௌசல்யாதேவி கோவிந்ப்பிள்ளை எள பலரும் கலந்த கொள்ளவுள்ளனர்.

இன்றைய வானிலை அறிக்கை!!!

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று தற்காலிகமாக சிறிது குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

தலைமைச் செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம் திடீர் பதவி நீக்கம்!!!

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த எல்.வி. சுப்பிரமணியம் நீக்கப்பட்டார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தால் அவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதும் எல்.வி. சுப்பிரமணியன் அதே பொறுப்பில் நீடித்து வந்தார்.
இந்நிலையில், முதன்மைச் செயலாளர் பிரவீன் பிரகாஷ் விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் விவகாரத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் எல்.வி. சுப்பிரமணியம் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவரைப் பதவி நீக்கம் செய்துள்ளார். எல்.வி. சுப்பிரமணியம் தற்போது மனிதவள வளர்ச்சி கழகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

10 மடங்காக அதிகரிக்கும் யுரேனியம் கையிருப்பு -எதிரி நாட்டிற்கு நன்றி கூறும் ஈரான்

கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அணுவாயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் ஏற்படுத்தியது. ஆனால் இந்த விடயம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது.
அத்துடன் ஒப்பந்தம் மூலம் விலக்கபட்டிருந்த பொருளாதார தடைகளை மீணடடும் அமெரிக்கா ஈரான் மீது விதித்தது இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அதிகரிப்போவதாக ஈரான் எச்சரித்தது.
இது குறித்து கடந்த செப்டெம்பர் மாதம் 7 ம் திகதி ஒப்பந்தத்தில் உள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகள் இப் பிரச்சனையை சுமூகமாக தீர்க்காவிடில் யுரேனியம் கையிருப்பை அதிகரிப்பதாக எச்சரித்து தீர்மானம் எடுக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்கியது.
நேற்றுடன் 60 நாட்கள் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை முன்னர் இருந்ததை விட பத்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் சலேஹி கூறுகையில்
இரு மாதங்களுக்கு முன்பு இது நாளொன்றுக்கு 450 கிராம் அளவில் தயாரிக்கபட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு செப்டம்பர் 7 ஆம் திகதி செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புக்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி நாளென்றிற்கு 5 கிலோ அளவில் யுரேனியம் தற்போது தயாரிக்கப்படுகிறது.
ஈரானிய பொறியாளர்கள் ஐஆர் -9 இன் முன்மாதிரி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இது எங்கள் புதிய இயந்திரம் ஆகும். மேலும் ஐஆர்-எஸ் என்ற புதிய இயந்திரத்தின் மாதிரியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இரண்டு மாதங்களில் நடந்தவை. இது செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியில் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
அணுசக்தி துறையில், ஈரான் நாட்டின் வலிமையைக் காட்ட இந்த வாய்ப்பை தந்ததற்கு எதிரிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும், என தெரிவித்தார்.

தமிழகத்தில் சிபிஐ அதிரடி சோதனை!!!!


தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் 187 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் மீது 42 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இந்த மோசடியில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து டெல்லியில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ-யின் சிறப்பு குழுக்கள் தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, குஜராத், கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் சென்னை, திருப்பூர், மதுரை, பழனி ஆகிய நகரங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் சட்ட விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 867 முறைப்பாடுகள்