எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஷநாயக்க இன்று எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நாளைய தினம் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது.
இவர்களின் பெயர் பட்டியல் கிடைத்த பின்னர் அதற்கேற்ப ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் இது வரையில் எந்தவித தகவல்களும் கிடைக்க வில்லை என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
Cap comentari:
Publica un comentari a l'entrada