THAMIL LANKA NEWS

dijous, 21 de novembre del 2019

சற்று முன்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பு!..

புதிய அமைச்சரவை பதவி ஏற்பில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுள்ளார்.
தற்போது 15 பேர் கொண்ட அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் போன்றோரும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுடன் ஒன்றிணைந்த எதிரணியாக செயற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த அமைச்சரவை அடுத்த பொதுத்தேர்தல் வரையில் பதவியில் இருக்கும்.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அதன் பின்னர் சபை கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.