THAMIL LANKA NEWS

dijous, 21 de novembre del 2019

தமிழக அரசியல் வாதிகள் என்ன செய்தனர் ஈழ தமிழர்களுக்கு-நாமல் ராஜபக்ஷ

இலங்கையில் நடந்து முடிந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதையடுத்து தற்போதைய புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மகனும் எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தமிழக அரசியல் வாதிகளை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் கோட்டாபாய ராஜபக்ஷ தமிழக அரசியல்வாதிகள் தான் தமிழர்-சிங்களவர் என இனங்களுக்கிடையில் பகைமையை தங்களது சுயநலத்திற்காக வளர்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை பயன்படுத்தி ஒரு உள்நாட்டுப்போரை நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும் அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது என பதிலலித்தார்
தற்போது மீண்டும் தமிழக தலைவர்களுக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ பேட்டியளித்துள்ளார் அவர் அதில் கூறியதாவது மக்களின் முடிவை ஏற்றுகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என ஆரம்பித்த அவர்
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமானது ஆனால் தமிழக அரசியல்வாதிகள் சிலர் இதை தமிழர்-சிங்களவர் யுத்தமாக மாற்றி தங்களது சுய நலத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஈழத் தமிழருக்கு தமிழக அரசியல்வாதிகள் இதுவரை என்ன தான் செய்திருக்கின்றனர் எனவும் மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.