THAMIL LANKA NEWS

dijous, 14 de novembre del 2019

கோட்டபாயவின் வெற்றியை மழுங்கடிக்க முடியாது


சேறு பூசும் நடவடிக்கை மூலம் கோட்டபாயவின் வெற்றியை மழுங்கடிக்க முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடந்தம் அவர் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதைப் பொறுக்க முடியாத எதிர்கட்சியினர் சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர் அணியினரின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதை தாங்கிக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் மனவிரக்திக்கு உள்ளாகி எம் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், வழமைபோல் மேற்கத்தைய நாடுகளும் மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.
கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். கோத்தபாயவின் வெற்றியை உறுதி செய்துள்ள கல்வியாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாட்டாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
வன்னி மாவட்டத்தில் இனவாதமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிராக கவனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
கோட்டபாயவை வெல்ல வைப்பதற்காக செயற்படும் எமது கூட்டு கட்சிகள் இனவாதம் பேசுவதை நிறுத்தி தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
வன்னி மாவட்டத்தில் கூட்டுக்கட்சிகள் இனவாதம் கக்கவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களிடம் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காலி மாவட்டம் எல்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மை மக்கள் மாற்றத்திற்குள் வந்துள்னர் என்பதை தேர்தல் முடிவுகள் அறிவித்துள்ளன.
நாம் ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச 60 விதமான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: வவுனியா பிராந்திய செய்தியாளர்