THAMIL LANKA NEWS

dijous, 14 de novembre del 2019

அதிகாரத்தை வைத்து கொண்டு மத்திய வங்கியில் நிதி மோசடி

ஊழல், மோசடியை தடுப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதிகாரத்தை கொண்டு மத்திய வங்கியில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகமயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஜனவரி மாதம் ஆட்சியை பெற்றுக்கொண்டதன் பின்னர், பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி, 50 நாட்கள் செல்லும் முன்னர் மத்திய வங்கியில் மோசடி இடம்பெறுகின்றது.
ஆயிரத்து 100 கோடி நட்டம் ஏற்பட்டது. அர்ஜுன மகேந்திரனுக்கு அதில் தொடர்புள்ளது. அர்ஜுன் அலோஸியஸ் அதில் இலாபமடைந்துள்ளார்.
பிரதமருக்கும் அதில் தொடர்புள்ளதாகவும் மார்ச் மாதம் நாடாளுமன்றில் வைத்து தன்னால் தகவல் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்ள்ளார்.