THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

2019 ஜனாதிபதி தேர்தல் முடிவு நாட்டை நிரந்தரமாக பிரிக்குமா? இணைக்குமா?

நவீன துட்டகாமினி புதிய ஜனாதியாக பதவியேற்றார்.இவர் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய மண்டபத்தில் பௌத்த பிக்குகள் மத்தியில் தனது பதவிப்பிரமானத்தை ஏற்றுக்கொண்டார்.
2000 வருடங்களுக்கு முன்பு அனுராதபுர ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த எல்லாள மன்னனை எதிர்த்து துட்டகாமினி போரிட்டு வெற்றி பெற்றார்.
அதையடுத்து நாட்டில் இருந்து இந்தியர்களை விரட்டியடித்தார் அதே போல தமிழர்களின் கொட்டத்தை அடக்கிய கோட்டாபய ராஜபக்ஷ நவீன துட்டகாமினி என தன்னை அழைப்பதில் விருப்பம் கொண்டுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் தமிழீல விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிழ யுத்தம் 2009 மே மாதம் முடிவிற்கு வந்தது.அந்த கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு செயலாலராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார்.
தமிழில விடுதலைப் புலிகளுக்கிடையிலான இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வென்று தமிழர்களை அடிமை கொண்ட பெருமை கோட்டாபய ராஜபக்ஷவயே சாரும்.
அதையடுத்து நாட்டில் உள்ள பௌத்த பிக்குகளும்,பௌத்த மதத்தினரும் கோட்டாபய ராஜபக்ஷவயே நவீன துட்டகாமினி என வீரவணக்கம் செலுத்தி வந்தார்கள்.
2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவ மொட்டுக் கட்ச்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டார்.
அந்த கால கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்ச்சியின் கூட்டணி சார்பில் முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் மகன் சஜித் பிரேமதாச போட்டியிட்டார்.
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த வரும் தமிழர்களும்,முஸ்ஸீம்களும் கோட்டாபயவை எதிர்த்தனர்.அவர்கள் தங்கள் முழு ஆதரவையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க முன் வந்தனர்.
தமிழர்கள்,முஸ்ஸீம்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என நன்றாக தெரிந்த கோட்டாபய ராஜபக்ஷ இனம் ,மதம்,மொழி ஆகிய ஆயுதங்களை கையில் எடுத்தார்.
பௌத்தத்தை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்டு நாட்டில் வாழும் சிங்கள பௌத்தர்கள் சிறுபான்மை மக்களின் சர்வாதிகாரத்திற்கு கட்டுப்படக் கூடாது இதற்கு மாற்று வழிவகைகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கினார்.
சிறுபான்மை மக்களின் சர்வாதிகாரத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விடுதலை பெற வேண்டும் நாட்டை தங்கள் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
நாட்டில் வாழும் 80 சதவிகித சிங்கள பௌத்த மக்கள் தங்களது வாக்கை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அளித்தனர்.
சென்ற 16ம் திகதி நடநடத தேர்தல் முடிவுகள் இந்த கருத்திற்கு ஒரு துள்ளியமாக எடுத்ததுக் காட்டாக பிரதிபலிக்கிறது.
வடக்கு,கிழக்கு மாகாணத்தை தவிர நாட்டில் உள்ள ஏனைய 7 மாகாணங்களிலும் கோட்டாபய ராஜபக்ஷவே முன்னிலை வகித்தார்.
மொத்தமாக 69 லட்சத்து 24 ஆயிரத்த 255 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 13லட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்து கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
நேற்று நவம்பர் 18ம் திகதி அனுராதபுரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தனக்கு சிங்கள பௌத்த மக்களின் அமொக ஆதரவு இருக்கிற விடயம் எனக்கு முன் கூட்டியே நன்றாக தெரியும் நானே வெற்றி பெறுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். என்ற போதிலும் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்ஸீம்களை என்னோடு இணைத்து செல்ல முயற்சித்தேன் ஆனால் அவர்கள் எனது அழைப்பிற்கு ஒத்துளைப்பு வழங்கவில்லை இருந்த போதிலும் இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்பு அவர்களையும் இலங்கையர்களாக கருதி என்னோடு அழைத்து செல்ல விரும்புகிறென் என கூறினார்.
முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எனத நீண்ட கால நண்பர்.1970ம் ஆண்டு அவர் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட தொடக்கம் 2015ம் ஆண்டுவரை எனது நண்பராக இருந்தார்.
அந்த கால கட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் தம்பிகளான பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவுடன் எனக்கு நெருங்கிய ஈடுபாடும் தொடர்புகளும் இருந்தன.
பசில் ராஜபக்ஷ அவர்களுடன் நான் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்.ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நான் அதிகம் தொடர்பு வைத்திருக்கவில்லை.
அன்றைய காலத்தில் நான் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உத்தியோக பூர்வ அலுவலகமான அலறி மாளிகையில் நான் அவ்வப்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட உரையாற்றுவது வழக்கம் .
அவ்வாறு உரையாற்றும் போது எல்லாம் கோட்டாபய ராஜபக்ஷவும் எனது பேச்சை கேட்பது எனது நினைவின் நிழலானது.
துரமிஸ்ட வசமாக 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இனங்களிற்கிடையிலும் மதங்களிற்கிடையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலாக தமிழ் விடுதலைப் புலிகளால் உரவாக்கத் தவறிய தமிழ்,முஸ்ஸீம் மற்றும் பௌத்த சிங்களம் என்ற தவிர்க்க முடியாத பிரிவுகளை இந்த தேர்தல் ஏற்படுத்திருக்கிறது. அந்த பிரிவு நிலை நாட்டின் ஒற்றுமைக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் கிடையாது.
நாட்டில் சமாதனமும் அமைதியும் நிலவுமா என காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கட்டுண்டோம் காத்திருப்போம் காலம் பதில் சொல்லும்.