THAMIL LANKA NEWS

dimarts, 19 de novembre del 2019

தமிழக அரசியல் தலைவர்களுக்கும் – புலம்பெயர் நாடுகளில் வாழும் அரசியல் பிரமுகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்: வீ. ஆனந்தசங்கரி!

எமது மக்களின் விடிவிற்காக தமிழக தொப்புள்கொடி உறவுகளுடன் புலம்பெயர் தமிழர்களும் சேர்ந்து
குரல்கொடுத்து எமக்கு இன்றுவரை ஆதரவு அளித்துவரும் அனைத்து மக்களுக்கும்ரூபவ் அரசியல் தலைவர்கள் மற்றும்
பிரமுகர்களுக்கும் எமது கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்!
எமது கட்சி 1977 ஆம் ஆண்டு அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் பிரதான எதிர்க்கட்சியாக
இருந்த காலத்தில் தமிழகத்தின் உறவுகளும் மற்றும் அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
உலகறியச் செய்த செயற்பாட்டை எண்ணிப்பார்க்கின்றோம். அன்று தமிழகத்து அரசியல் தலைவர்களின்
தீவிரமான விடாமுயற்சியால்தான் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான எமது கட்சியின் செயலாளர் நாயகம் அமரர் அ. அமிர்தலிங்கம் உட்பட
பல தலைவர்கள் அடுத்தடுத்து விவேகமற்ற ஒரு சில இளைஞர்களின் செயற்பாட்டால் துப்பாக்கிக் குண்டுகளுக்கும்
தற்கொலைக் குண்டுக்கும் இரையாக்கப்பட்டபோதும் தொடர்ந்தும் இன்றுவரை சோர்ந்துவிடாது ஜனநாயக மரபுடன்
செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
எமக்கும் தமிழகத்து மக்களுக்கும் எவ்வாறு தொப்புள்கொடி உறவு உள்ளதோ அதேபோன்று சிங்கள மக்களுக்கும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் காலத்திலிருந்தே தமிழகத்திலும் தொப்புள்கொடி உறவு இருந்தது. இதுவரை பேசப்படாத விடயம் யாதெனில் சிங்கள இனத்தைதோற்றுவித்த விஜயனுக்கு மதுரை மன்னருடைய இளவரசி மணப்பெண்ணாகவும்ரூபவ் ஏனைய 700 நண்பர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப 700 கன்னியர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனவே தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் மாண்புமிகு கோத்தபாய ராஜபக்ஷவின் தெரிவை தமிழக அரசியல்
தலைவர்களில் ஒருசிலர் தமது வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்கிறார்கள். இது எமது மக்களின் நல்வாழ்வுக்கு
வழிவகுக்காமல் மேலும் மேலும் துன்பத்திற்கு வழிவகுத்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய ஜனாதிபதியை அணுகி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய
மாநிலங்களுக்குள்ள அதிகாரத்தை ஒத்த ஒரு அரசியலமைப்பை பெற்றுத்தர இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் முயற்சிக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் வேதனையின் விளிம்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் சார்பில் தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.
என்னால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை ஒரு கால கட்டத்தில் சிங்கள மக்கள் மற்றும் மதகுருமார்கள் அரசியல்
பிரமுகர்கள் மத்தியில் வலுவான ஆதரவு இருந்தது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.
உங்களில் ஒரு சிலரும் புலம்பெயர் நாட்டுப் பிரமுகர்கள் சிலரதும் அறிக்கைகள் இங்குள்ள எமது சகோதர
இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் வலுவடையச் செய்யுமே தவிரரூபவ் வேறு ஆக்கபூர்வமான எதையும்
செய்யப்போவதில்லை என்பதை நீங்கள் உணர்ந்து இனமுறுகலை ஏற்படுத்தாதவாறு இனங்களுக்கிடையே நல்லுறவை
வளர்ப்பதாக உங்கள் அறிக்கைகள் அமைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.
நீங்கள் அக்கறையெடுத்துச் செயற்படவிரும்புவீர்களேயானால் நாம் ஒரு புத்திஜீவிகள் அடங்கிய தூதுக்குழுவாக வந்து சந்தித்து உங்கள் ஆலோசனைகளைப் பெற்று எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வை அடைய ஆர்வமுடன் இருக்கின்றோம்!
நன்றி!.
வீ. ஆனந்தசங்கரி