THAMIL LANKA NEWS

dilluns, 25 de novembre del 2019

பட்டதாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி

தான் ஆட்சியை பெற்றுக்கொண்டதன் பின்னர் 54 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் தண்ணீர், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு என்பனவற்றுக்காக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கௌ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவருக்கும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி அளவில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும். அரச துறையில் ஒரு இலட்சம் அளவில் வெற்றிடம் உள்ளது.
திறன்கள் தொடர்பில் அவசியமற்ற தொழில்வாய்ப்புகள் அவற்றில் உள்ளன. இந்த நிலையில், திறன்கள் தொடர்பில் அவசியமற்ற தொழில்துறையில், ஒரு தொழில்வாய்ப்பு வறுமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
இதனூடாக அவர்களை வறுமையிலிருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களது கடமையை நிறைவேற்றினால், பாதுகாப்பான, சௌபாக்கியமான நாட்டை உருவாக்குவேன் என்ற உறுதிமொழியை தங்களுக்கு வழங்குவதாகவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்திருந்தார்.