THAMIL LANKA NEWS

dimarts, 5 de novembre del 2019

தமிழகத்தில் சிபிஐ அதிரடி சோதனை!!!!


தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் 187 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் மீது 42 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இந்த மோசடியில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து டெல்லியில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ-யின் சிறப்பு குழுக்கள் தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, குஜராத், கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் சென்னை, திருப்பூர், மதுரை, பழனி ஆகிய நகரங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.