THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

25,712 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்

நாடுமுழுவதும் உள்ள 12 ஆயிரத்து 856 வாக்களிப்பு நிலையங்களுக்காக 25 ஆயிரத்து 712 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், 6 ஆயிரத்து 86 பொலிஸார் நாடுமுழுவதும் நடமாடும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், 6 ஆயிரத்து 86 சிவில் பாதுகாப்பு தரப்பினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன், வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களில் 2 ஆயிரத்து 193 பொலிஸார் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
கலகம் அடக்கும் பணிக்காக ஆயிரத்து 233 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வீதித் தடைகளுக்கான பணிகளை ஆயிரத்து 688 பொலிஸாரும், 190 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் மேற்கொள்ள உள்ளனர்.
இதேவேளை, குறித்த கடமைகள் உட்பட ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏனைய கடமைகளுக்காக 60 ஆயிரத்து 175 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், 8 ஆயிரத்து 80 சிவில் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளை மேற்கொள்ள உள்ளனர். சில கடமைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.