THAMIL LANKA NEWS

dilluns, 11 de novembre del 2019

இந்த தூக்குத் தண்டனை கைதிக்கு மைத்திரி ஏன் பொது மன்னிப்பு வழங்கினார்?

வெளிநாட்டு பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஜுட் சமந்த ஜயமகவை பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கும் உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
பதவிக்காலம் நிறைவடைய 7 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் குறித்த உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு ராஜகிரிய றோயல் பார்க் தொடர்மாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த 18 வயதான இவோன் ஜோன்சன் என்ற பெண்ணை ஜூட் ஜயமக என்பவர் கொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குற்றவாளியான ஜூட் சமந்த ஜயமகவிற்கு 12ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்க்ப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜுட் சமந்த குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்தார்.
இதன்போது, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை போதுமானதாக இல்லை எனவும், அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
பின்னர் குற்றவாளியின் மீண்டும் மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை ஆட்சேபித்து, ஜுட் சமந்த ஜயமக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், இந்த மேன்முறையீட்டினை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்து தீர்ப்பினை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.
இந்த நிலையில், தூக்குத் தண்டனைக் கைதி ஜுட் சமந்த ஜயமகவை பொது மன்னிப்பில் விடுவிக்கும் உத்தரவை ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த பொது மன்னிப்பு ஆவணங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.