THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு!!!

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்தன.இதற்காக ஐந்து தினங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக வீடுவீடாக செல்லும் போது, 11 பேருக்கு மேல் செல்ல முடியாது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
11க்கு மேற்பட்டவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது, சட்டவிரோத பேரணியாகவே கருதப்படும்.
அதேநேரம் அவர்கள் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்வதற்காக எடுத்துச் செல்கின்ற கையேடுகள் என்பன வீதிகளில் காட்சிப் படுத்தப்படுவதும் சட்டவிரோதமாகும்.
அத்துடன் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்காக, நாடு முழவதும் தற்காலிமாக 1661 பணியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.