THAMIL LANKA NEWS

dijous, 7 de novembre del 2019

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் அறிக்கை ஆபத்து – மகிந்த ராஜபக்ச

ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம், எழுத்து மூல உறுதிப்பாட்டை, மகாநாயக்க தேரர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைவை விடவும்,  ஆபத்தானதாகவே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
நாட்டில் பிரதான கட்சியொன்று ஒற்றையாட்சியை நீக்கி விட்டு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டமை இதுவே முதல் தடவை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.